AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெகவில் பதவி ஆசை காட்டி பலாத்காரம்.. கருவை கலைத்து கொலை மிரட்டல்.. அரக்கோணம் ஒன்றிய செயலர் மீது புகார்!

Harassment Complaint Against TVK Functionary : தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி அரக்கோணத்தை சேர்ந்த ஒரு பெண்ணை அரக்கோணம் கிழக்கு தவெக ஒன்றிய செயலாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தவெகவில் பதவி ஆசை காட்டி பலாத்காரம்.. கருவை கலைத்து கொலை மிரட்டல்.. அரக்கோணம் ஒன்றிய செயலர் மீது புகார்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 19 Oct 2026 21:14 PM IST

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணை அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதில் ஏற்பட்ட கருவை கலைத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகாரை அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஒன்றிய பகுதிக்குள்பட்ட வடமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவர் தமிழக வெற்றி கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கும், தமிழக வெற்றி கழகத்தின் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் என்பவருக்கும் கட்சி ரீதியாக பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அந்த பெண்ணின் வாட்ஸ் ஆப் எண்ணை பெற்ற சசிகுமார், அவரிடம் தொடர்ந்து வாட்ஸ் ஆப் மற்றும் செல்போன் வாயிலாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.

பெண் வற்புறுத்தி வன்கொடுமை செய்த தவெக நிர்வாகி

அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் பதவி வாங்கித் தருவதாக அந்த பெண்ணிடம் சசிகுமார் ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது. இதை நம்பிய அந்த பெண் அவரிடம் நெருங்கி பழகி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த மே மாதம் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற சசிகுமார் அவரை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதை பயன்படுத்தி பலமுறை அந்த பெண்ணை சசிகுமார் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிகிறது.

மேலும் படிக்க: சிவகங்கையில் கூலிப்படையினரின் மனித வேட்டை.. தவெக அரசின் நிர்வாக தோல்வியே காரணம்.. லெப்ட்- ரைட் வாங்கிய நயினார்!

கருக்கலைப்பு செய்து தொடர் கொலை மிரட்டல்

இதில், அந்த பெண் கர்ப்பம் ஆகி உள்ளார். இது தொடர்பாக அந்த பெண் சசிகுமாரிடம் தெரிவித்த நிலையில், அவர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அந்த கருவை கருக்கலைப்பு செய்ததாகவும் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த சிலர் அந்த பெண்ணை தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் கூறி அந்த பெண் அரக்கோணம் நகர காவல் நிலையத்தில் புகார் மனுவாக அளித்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் அந்த பெண் அளித்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக ஒன்றிய செயலாளர் கூறுவதென்ன

அந்த புகாரை பெற்றுக் கொண்ட அரக்கோணம் நகர காவல் நிலைய போலீசார் அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் கூறுகையில், இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான புகார் என்றும், இதனை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், அரசியல் கால் புணர்ச்சி காரணமாக தமிழகம் முழுவதும் இதுபோன்று பொய் புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: முதல்வர் குறித்து அவதூறு பேச்ச.. கனிமொழி- பிரியா சிரித்தது பொது வாழ்வுக்கு ஏற்ற செயல் அல்ல.. ஜெகதீஸ்வரி கண்டனம்!

Follow Us