முதல்வர் குறித்து அவதூறு பேச்சு.. கனிமொழி- பிரியா சிரித்தது பொது வாழ்வுக்கு ஏற்ற செயல் அல்ல.. ஜெகதீஸ்வரி கண்டனம்!
Minister Jagadeeswari Latest Speech : திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த விவகாரத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது சமூக வலைதள பக்கத்தில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யை பொது மேடையில் அவமரியாதியாக பேசுவதும், தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதும் ஜனநாயக மாண்புகளுக்கும், அரசியல் நாகரித்துக்கும் எதிரான செயலாகும். முதல்வர் பற்றி அவதராகவும், இழிவாகவும் பேசியவர்களின் செயலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய தரக்குறைவான பேச்சுகள் ஈடுபட்டவர்கள் தங்களது பேச்சில் உள்ள தவறை உணர்ந்து தமிழக முதல்வரிடமும், தமிழக மக்களிடமும் மனமுவந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
கனிமொழி- பிரியா சிரித்தது பொது வாழ்வுக்கு ஏற்ற செயல் அல்ல
முதல்வர் விஜய் குறித்து இழிவாக பேசப்பட்ட நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் பொது மேடையில் சிரித்துக் கொண்டிருந்தது பொறுப்பான பொது வாழ்வுக்கு ஏற்ற செயலானது அல்ல. இது போன்ற அணுகுமுறை அரசியல் நாகரீகம் மற்றும் பொது வாழ்வின் பொறுப்புணர்வு குறித்த கேள்விகளை எழுப்புகிறது. தொடர்ந்து இதுபோன்ற அவதூறான பேச்சுகளில் ஈடுபடுவது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க: தவெக-வுக்கு குவிந்த ரூ.13.3 கோடி நன்கொடை.. 99% நிதியை அள்ளி கொடுத்த 2 அமைச்சர்கள்.. யார் அந்த கொடை வள்ளல்கள்!




அரசியல் கொள்கையில் கருத்து வேறுபாடுகள்
தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பை அரசியல் கட்சிகள் மதித்து, தங்களது செயல்பாடுகளை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொது மக்களின் ஆதரவை பெறுவதற்கு அவதூறான பேச்சுகள் அல்ல, கண்ணியமான அரசியலும், பொறுப்பான செயல்பாடுகளுமே அவசியம் ஆகும். அரசியல் வாழ்வில் ஒவ்வொரு கட்சிகள் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்தும், கொள்கைகள் குறித்தும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தனி நபர் அவமதிப்பும், தரக்குறைவான பேச்சும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
முதல்வர் குறித்த பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்
அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் பேச்சிலும், செயலிலும் பொறுப்புணர்வுடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டும். எனவே, தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் பேசியவர்கள் தங்களது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன், பகிரங்கமாக மன்னிப்பும் கேட்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், அரசியல் நாகரீகத்தையும், பொது வெளியில் கண்ணியத்தையும் பேணி காப்பது அரசியல்வாதிகளின் கடமை ஆகும் என அந்த அறிக்கையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: சிவகங்கையில் கூலிப்படையினரின் மனித வேட்டை.. தவெக அரசின் நிர்வாக தோல்வியே காரணம்.. லெப்ட்- ரைட் வாங்கிய நயினார்!