சிவகங்கையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. 24 மணி நேரத்தில் 3 பேர் கைது.. 8 பேருக்கு தனிப்படை வலைவீச்சி!
Sivaganga Rowdy Murder 3 Arrested : சிவகங்கை மாவட்டத்தில் ரவுடி சுள்ளான் மதன் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட் ட சம்பவமத்தில் அதில் தொடர்புடையதாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
ரவுடி கொலையில் கைதான 3 பேர்.
சிவகங்கை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் மதன் ( 26 வயது). இவர், மீது கொலை வழக்கு உட்பட 14 வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதாகவும், பிரபல ரவுடியாக வலம் வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2024- ஆம் ஆண்டு மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்களான சூர்யா ( 24 வயது) மற்றும் சுபாஷ் ( 23 வயது) ஆகியோரை மதன் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி மதனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து, ஜாமீன் பெற்ற மதன் சிறையில் இருந்து வெளிவந்தார். இவர், ஏற்கனவே 2 முறை நடந்த கொலை முயற்சியில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
மஞ்சுவிரட்டுக்கு காளையுடன் சென்ற ரவுடி
இதனால், ரவுடி மதன் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான், நேற்று ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை அருகே உள்ள ஒக்கூர் மேலமங்கலத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பங்கேற்பதற்காக ரவுடி மதன் தனது காளையை அழைத்துக் கொண்டு நிகழ்ச்சி நடைபெறும் ஊருக்கு சென்றிருந்தார். அங்கு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சுமார் ஒரு மணி அளவில் மேல மங்கலத்தில் உள்ள பள்ளி அருகே தனது காலை உடன் ரவுடி மதன் நின்று கொண்டிருந்தார்.
மேலும் படிக்க: நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் தலையை கொடுவாளால் பதம் பார்த்த கணவன்.. ஓசூரில் பரபர சம்பவம்!
ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டி கொலை
அப்போது, அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் அவரை வெட்ட முயற்சித்தது. இதில், அச்சமடைந்த ரவுடி மதன் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஓடினார். அவரை, விடாமல் அந்த கும்பல் துரத்தி சென்ற நிலையில், அந்தப் பகுதியில் உள்ள கரும்புத் தோட்டம் அருகே ரவுடி மதனை சுற்றி வளைத்த அந்த கும்பல் அரிவாள், வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
3 பேரை கைது செய்த போலீசார்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, சிவகங்கை துணை காவல் கண்காணிப்பாளர் அமல அட்வின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, ரவுடி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு சம்பவம் தொடர்பாக மானாமதுரையை சேர்ந்த பாபு (23 வயது), பாலமுருகன் மற்றும் திருமங்கலத்தை சேர்ந்த பிரதீப் (28 வயது) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்த நிலையில் மீதமுள்ள 8 பேரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: நண்பர்கள் எச்சரிக்கையை மீறி சென்ற இருவர்.. புழல் ஏரியில் மூழ்கி பலியான சோகம்..சென்னையில் நிகழ்ந்த சம்பவம்!
Follow Us