நடத்தையில் சந்தேகம்.. மனைவியின் தலையை கொடுவாளால் பதம் பார்த்த கணவன்.. ஓசூரில் பரபர சம்பவம்!
Hosur Husband Murdered His Wife : கிருஷ்ணகிரியில் மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொடுவாளால் கணவன் வெட்டி கொலை செய்தார். தொடர்ந்து, அவர் கெலமங்கலம் காவல் நிலையத்தில் கொலையை ஒத்துக கொண்டு சரணடைந்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு பங்காரப்பா நகர் பகுதியில் வசித்து வருபவர் குமார் ( 32 வயது). இவர், கூலி தொழில் செய்து வருகிறார். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள அக்கொண்டம்பள்ளியில் வசித்து வரும் ருக்குமணி ( 28 வயது) என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு நைனா ( 8 வயது) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அக்கொண்டம்பள்ளி கிராமத்தில் குமார் வாடகை வீட்டில் தண்ணீர் இருந்து கூலி வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி ருக்குமணி அந்த பகுதியில் செயல்பட்டு வரும் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், ருக்குமணி செல்போனில் அடிக்கடி யாரிடமும் பேசி வந்ததுடன், வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தியும் அனுப்பி வந்ததாக தெரிகிறது.
மனைவி தலையில் கொடுவாளால் வெட்டி கொன்ற கணவன்
இந்த விவகாரம் ருக்மணியின் கணவர் குமாருக்கு தெரியவந்த நிலையில், ருக்குமணியின் நடத்தையில் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரிடம் குமார் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு ருக்குமணி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கணவர் குமார் திடீரென கொடுவாளால் ருக்குமணியின் தலையில் கொடூரமான முறையில் வெட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: செவிலியர் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.. போலீசிடம் சிக்கிய சந்தேக நபர்.. வெளியான புதிய தகவல்கள்!!
கெலமங்கலம் காவல் நிலையத்தில் சரணடைந்த தொழிலாளி
இதில், ருக்குமணியின் தலையில் பெரிய வெட்டு காயம் ஏற்பட்ட நிலையில், அவரது மூளை வெளியே சிதறி ரத்தம் வெளியேற நிலையில் துடிக்க துடிக்க பரிதாபமாக உயிரிழந்தார். உடனே, அங்கிருந்து வெளியேறிய அவரது கணவர் குமார் கெலமங்கலம் காவல் நிலையத்துக்கு நடந்தே சென்று கொடுவாளை ஒப்படைத்து தனது மனைவியின் நடத்தையில் இருந்த சந்தேகத்தால் அவரை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். இதை தொடர்ந்து, அவர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை
முன்னதாக, வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த ருக்குமணியின் சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அருகில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் கணவன் மனைவியுடன் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நண்பர்கள் எச்சரிக்கையை மீறி சென்ற இருவர்.. புழல் ஏரியில் மூழ்கி பலியான சோகம்..சென்னையில் நிகழ்ந்த சம்பவம்!