AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திருச்செந்தூர் முருகன் கோயில் சொத்தில் அர்ச்சகர் கைவரிசை.. காட்டிக் கொடுத்த 3- ஆம் கண்.. அடுத்து நடந்த தரமான சம்பவம்!

Tiruchendur Subramanya Swamy Temple : திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி முருகன் கோவிலில் உண்டியலில் நூதன முறையில் காணிக்கை பணத்தை திருடிய அர்ச்சகர் மற்றும் அவரது கூட்டாளி ஆகிய இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில் சொத்தில் அர்ச்சகர் கைவரிசை.. காட்டிக் கொடுத்த 3- ஆம் கண்.. அடுத்து நடந்த தரமான சம்பவம்!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 20 Oct 2026 14:40 PM IST

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உலகப் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வந்து செல்கின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் தங்களது காணிக்கை பணத்தையும், வேண்டுதல் பணத்தையும் செலுத்துவது வழக்கமாகும். அதன்படி, கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் நிறையும்போது, அதனை அறநிலையத்துறை ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கணக்கிட்டு கோவில் வங்கி கணக்கில் செலுத்துவது வழக்கமாகும். அதன் அடிப்படையில், சுப்ரமணியசாமி கோவில் மூலவர் சன்னதிக்கு எதிரே அமைந்துள்ள நிரந்தர உண்டியலில் காணிக்கை பணம் நிறைந்து காணப்பட்டது. உடனே, அந்த உண்டியலை திறந்து அதில் இருந்த காணிக்கை பணம் எண்ணப்பட்டன. ஆனால், அதில் காணிக்கை பணம் குறைவாக இருந்தது தெரியவந்தது.

கோயில் உண்டியலில் கைவரிசை காட்டிய அர்ச்சகர்

இதனால், கோவில் நிர்வாகத்தினர் சந்தேகம் அடைந்த நிலையில், கோயில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், அதிர்ச்சி காட்சி ஒன்று பதிவாகி இருந்தது. அதாவது, சுப்பிரமணியசாமி கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வந்த முகுந்தன் என்பவர் தனது கூட்டாளியான திருமுருகன் என்பவருடன் சேர்ந்து உண்டியலில் கைவரிசை காட்டிய காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ஆட்டோ.. அடுத்தடுத்து பிரிந்த இரு சிறுமிகள் உயிர்.. திருவள்ளூரில் சோகம்!

நூதன முறையில் காணிக்கை பணம் திருட்டு

இவர்கள் இருவரும் சேர்ந்து துணி மற்றும் பேப்பரை பயன்படுத்தி கவன் போன்ற முறையில் உண்டியலுக்குள் ஒட்ட வைத்து உண்டியலுக்குள் இருந்த பணத்தை நூதனமாக வெளியே எடுத்து திருடி உள்ளனர். இந்த அதிர்ச்சி காட்சிகளானது கண்காணிப்பு கேமராவில் மிகத் தெளிவாக பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளின் அடிப்படையில் கோவில் நிர்வாகம் சார்பில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ச்சகர் முகுந்தன், அவரது கூட்டாளி திருமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அர்ச்சகர் உள்பட இருவர் அதிரடி கைது

அவர்களிடம் கோவில் உண்டியலில் இருந்து திருடப்பட்ட சுமார் ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே, கோவில் அர்ச்சகர் முகுந்தன் என்பவரை போலீசார் முறையாக விசாரணை மேற்கொள்ளாமல் சொந்த ஜாமீனில் விடுவித்து விட்டதாகவும், அவரது கூட்டாளி திருமுருகனை மட்டும் கைது செய்ததாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில், இதுவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கோவில் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: சிவகங்கையில் ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை.. 24 மணி நேரத்தில் 3 பேர் கைது.. 8 பேருக்கு தனிப்படை வலைவீச்சி!

Follow Us