Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அண்ணாமலை - K. Annamalai

அண்ணாமலை - K. Annamalai

அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக மாநில தலைவர் ஆவார். இவர் கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த தொட்டம்பட்டியில் பிறந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணாமலை உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ இந்திய மேலாண்மை கழகத்தில் முதுநிலை வணிக நிர்வாகப் படிப்பை முடித்தார். பின்னர் யுபிஎஸ்சி 2011 ஆம் ஆண்டிற்கான தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை அதிகாரியாக பணியை கர்நாடகா மாநிலத்தில் பணியை தொடங்கினார். அண்ணாமலை, தமிழ், ஆங்கிலம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவராக திகழ்கிறார். இவர் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூர் நகர தெற்கு காவல் துணை ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார். 2019 ஆம் ஆண்டு காவல்துறையில் இருந்து விலகி ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தார். குறுகிய காலத்திலேயே பாஜக மாநில தலைவராக உயர்ந்தார். 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இதன் பின்னர் 2025 ஆம் ஆண்டு அண்ணாமலையில் பாஜக மாநில தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் தற்போது தேசிய பொதுக்குழுவில் முக்கிய நிர்வாகியாக பணியாற்றி வருகிறார்.

Read More

77 லட்சம் பெயர் நீக்கம்… அதிர்ச்சியாக இருக்கு… அதிரடி குறித்து அண்ணாமலை கருத்து

Annamalai : தமிழகத்தில் இதுவரை 77 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர், மேலும் 12.5 சதவிகிதம் வாக்களர் பட்டியலில் இல்லை என்பது ஆச்சரியமாக மட்டும் இல்லாமல் அதிர்ச்சியாக இருப்பதாகவும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அவர் பேசியது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை.. என்டிஏ கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி?

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதன்பின், அண்ணாமலை நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வத்திடமும், டிடிவி தினகரனிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இப்படியான சூழலில் அவர் டெல்லி சென்றுள்ளார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. திடீர் டெல்லி பயணம்.. பின்னணி என்ன?

Annamalai Delhi Visit: இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் ஓ.பன்னீர்செல்வத்தை ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து பேசினார். மேலும், டிசம்பர் 8, 2025 அன்று கோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஒரு மணி நேரத்திற்குமேல் ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஒரு முதல்வர் போடும் பதிவா இது? திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்ணாமலை காட்டம்..

Annamalai On Tiruparankundram Issue: முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் ‘மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது .......... அரசியலா?” என ஒரு பதிவு போடுகிறார். இது ஒரு முதல்வர் போடுகிற பதிவா? என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படும் திமுக அரசு.. திருப்பரங்குன்ற விவகாரம் குறித்து அண்ணாமலை சாடல்..

Tiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே உள்ள தூணில் தீபத்தை ஏற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீபத் தூணில் விளக்கை ஏற்ற முயன்றபோது, காவல்துறையினரால் தடுக்கப்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டது. இந்த சூழலில் தமிழக அரசு பிரிவினைவாத எண்ணத்துடன் செயல்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பிஎல்ஓக்களை திமுகவின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை

BJP Annamalai: பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. கடும் எதிர்ப்பையும் மீறி நடந்து வரும் இப்பணிகளுக்கு, தங்களுக்கு அதிக பணிசுமை தரப்படுவதாக பல்வேறு மாநிலங்களிலும் பிஎல்ஓக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவா அயர்ன்மேன் போட்டி: வெற்றிகரமாக முடித்த அண்ணாமலை.. பாராட்டிய பிரதமர் மோடி!

இப்போட்டியில் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா பங்கேற்றது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதோடு, பிரதமர் மோடியும் இவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது போன்ற நிகழ்வுகள் 'FitIndia' இயக்கத்துக்கு பங்களிப்பதாக கூறி அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு உடந்தையாக மாறிய திமுக.. 2,538 பதவிகளுக்காக ரூ. 888 கோடி லஞ்சம்- அண்ணாமலை காட்டம்..

Annamalai: அண்ணாமலையில் எக்ஸ் வலைத்தள பதிவில்,” திமுக அரசின் கீழ் நடந்த பெரிய மோசடிகள் மற்றும் முறையான ஊழல்கள் மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்தப்படுவது, தமிழக முதல்வர் M. K. ஸ்டாலின் மற்றும் அவரது நிர்வாகத்திடமிருந்து உடனடி பொறுப்புக்கூறலைக் கோருகிறது. நீதித்துறையால் கண்காணிக்கப்படும் ஒரு முழுமையான சிபிஐ விசாரணை மட்டுமே” என குறிப்பிட்டுள்ளார்.

நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன்.. மாரி செல்வராஜின் பைசன் படத்தை வாழ்த்திய அண்ணாமலை!

K Annamalai Praises Bison: தமிழில் கடந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம்தான் பைசன். இப்படத்தை மாரிசெல்வராஜ் இயக்க, துருவ் விக்ரம் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இப்படமானது உண்மை கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த படத்தை வாழ்த்தி பாஜக நிர்வாகி அண்ணாமலை எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

பழைய மடைமாற்றக் கதைகளைக் கொண்டு வர வேண்டாம்.. அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த அண்ணாமலை..

Annamalai: ஜிஎஸ்டி சீர்திருத்தம், சாலை திட்டங்கள், ரயில் திட்டங்கள், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம், ஓய்வூதியத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், நிதி பகிர்வு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, அண்ணாமலை தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முகாம் நடத்த பள்ளிக்கு விடுமுறை.. இந்த அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது? – அண்ணாமலை காட்டம்..

Annamalai On DMK Government: முகாம் நடத்துவதற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இதற்கு கடுமையான கண்டனத்தை தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது பதிவில், “அரசு பள்ளிக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புயல், மழை பார்க்காமல் உழைக்க வேண்டும் – அண்ணாமலை பேச்சு

2026ம் ஆண்டில் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன. எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பாஜகவின் நயினார் இன்று முதல் பரப்புரையை தொடங்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, பாஜகவினர் புயல், மழை பார்க்காமல் உழைக்க வேண்டுமென தெரிவித்தார்

நான்கரை ஆண்டு திமுக ஆட்சியில் நிறைய மாறியுள்ளது.. லிஸ்ட் போட்டு சொன்ன அண்ணாமலை..

Annamalai on DMK: மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “ திமுக ஆட்சியில் முதல்வர் பேண்ட் போடுவது, உதயநிதி நாயோடு போட்டோ போடுவது என மாறி உள்ளது. 2026 ல் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி கட்டிலில் அமர வைக்க மோடி முடிவெடுத்து அமித்ஷா அறிவித்து விட்டார்கள்” என பேசியுள்ளார்.

அதிமுக – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி.. ஒரே வார்த்தையில் ஓபனாக சொன்ன அண்ணாமலை..

Admk TVK Alliance: அதிமுக தவெக கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியபோது, “ எல்லோருடைய சித்தாந்தங்களும் வேறு வேறு பாதையில் இருக்கின்றன. தமிழக வெற்றி கழகம் ஒரு லைனில் இருக்கிறது; நாங்கள் ஒரு லைனில் இருக்கிறோம். அது எந்த அளவிற்கு ஒருங்கிணையும் என தெரியவில்லை — பொறுத்திருந்து பார்ப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.

கரூர் செல்ல அனுமதி எதற்கு? அந்த சூழல் தமிழ்நாட்டில் இல்லை – விஜய்க்கு எதிராக கேள்வி எழுப்பிய அண்ணாமலை

Karur Stampede : கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தவெக தலைவர் விஜய் அனுமதி கேட்டு டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ள நிலையில், கரூர் செல்ல அனுமதி எதற்கு என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசியிருப்பது நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு முரணாக அமைந்துள்ளது.