AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வரலாற்றில் முதல்முறையாக குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு.. முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தலைவர்கள் கண்டனம்!!

TNPSC Group 2 exams postponed; டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

வரலாற்றில் முதல்முறையாக குரூப் 2 தேர்வுகள் ஒத்திவைப்பு.. முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தலைவர்கள் கண்டனம்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Feb 2026 13:23 PM IST

சென்னை, பிப்ரவரி 08: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த TNPSC குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல், நந்தனம் தேர்வு மையத்தில் 9 மணியை கடந்தும் வினாத்தாள் வரவில்லை என புகார் எழுந்தது.  இதையடுத்து, இன்று நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதோடு, ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மாற்று நாளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்திற்கு தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: குடிநீர் பாட்டில்களில் மைக்ரோபிளாஸ்டிக் உறுதி… எச்சரிக்கை வாசகம் கட்டாயம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தேர்வைக் கூட உருப்படியாக நடத்த முடியாத அரசு:

இதுகுறித்து எதிர்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயாலளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த #TNPSC குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் “நிர்வாகம்” என்பது எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை , இந்த ஒரு நிகழ்வே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

#TNPSCGroup2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர் என்ற பேரதிர்ச்சியான செய்திகளும் வருகின்றன, “Technical Fault” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலுகின்ற திமுக ஆட்சியாளர்கள் , குரூப்- 2 என்பது எவ்வளவு முக்கியமான தேர்வு? அந்த Fault-ற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்.

தமிழ்நாட்டை “சூப்பர்ஸ்டார்” மாநிலமாக மாற்றிவிட்டதாக வாய்கிழிய மேடையில் பேசும் பொம்மை முதல்வர் ஸ்டாலினே ஒரு தேர்வைக் கூட உருப்படியாக நடத்த வக்கில்லாத கையாலாகாத அரசு தான் உங்கள் திமுக அரசு. ஏற்கனவே 5.5 லட்சம் வேலைகளைத் தரப்போகிறோம் என 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எல்லாம் காற்றில் பறந்துக்கொண்டு இருக்க, இருக்கின்ற தேர்வுகளைக் கூட ஒழுங்காக நடத்த வக்கற்ற திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என்று  அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்:

இதுகுறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் திமுக அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், திமுக அரசு செயல்பட்டு வருகிறது. அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டு காலம் கடுமையாக தங்கள் உழைப்பைக் கொடுத்து, தேர்வு மையங்களுக்குச் சென்ற இளைஞர்களின் கனவு பறிக்கப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டு காலம் இல்லாத இந்தக் குளறுபடி, லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட திமுக அமைச்சர்களால் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. லஞ்சம் ஊழல் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற கையாலாகாத அரசை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: விருப்ப மனுக்கள் பெறுவதில் தவெகவினர் ஆர்வம்.. 20,000 பேர் பதிவிறக்கம்.. முடங்கிய இணையதளம்..

போட்டித் தேர்வு கூட நடத்த முடியாத நிலையில் அரசு:

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் பதிவில், மிகச்சாதாரணமான ஒரு போட்டித் தேர்வைக் கூட குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு முடியாத நிலையில் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக ஆட்சியாளர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டும். இந்த குளறுபடிகளுக்கு இளநிலை அதிகாரிகளை பலிகடா ஆக்குவதை விடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தின் உயர்பொறுப்பில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Follow Us