AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு.. தேர்வு மைய குளறுபடியால் பரபரப்பு..

TNPSC Group 2 and 2A exams postponed: சென்னை அரும்பாக்கம் தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. நந்தனம் தேர்வு மையத்தில் 9 மணியை கடந்தும் வினாத்தாள் வரவில்லை என புகார் எழுந்தது. அதோடு, தேர்வெழுத அனுமதிக்கப்படாததால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகள் ஒத்திவைப்பு.. தேர்வு மைய குளறுபடியால் பரபரப்பு..
குரூப் 2, 2ஏ தேர்வுகள் தள்ளிவைப்பு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Feb 2026 12:48 PM IST

சென்னை, பிப்ரவரி 08: தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருந்த டிஎன்பிஎஸ் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கம் தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், நந்தனம் தேர்வு மையத்தில் 9 மணியை கடந்தும் வினாத்தாள் வரவில்லை என புகார் எழுந்தது. அதோடு, தேர்வெழுத அனுமதிக்கப்படாததால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று நடைபெற இருந்த குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மாற்று நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விருப்ப மனுக்கள் பெறுவதில் தவெகவினர் ஆர்வம்.. 20,000 பேர் பதிவிறக்கம்.. முடங்கிய இணையதளம்..

குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் உள்பட பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 828 பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு 2025 ஜூலை மாதம் டின்பிஎஸ்சி வெளியிட்டது. இதற்கான முதல்நிலைத் தேர்வு 2025 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதில் குரூப் 2 பதவிகளில் 1,126 பேரும், குரூப் 2ஏ பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றவர்களாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.

இன்று நடைபெற இருந்த தேர்வுகள்:

இந்த நிலையில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று நடக்கவிருந்தது. காலையில் குரூப் 2ஏ பதவிகளுக்கான பாடத்தேர்வும், பிற்பகலில் குரூப்2, 2ஏ பதவிகளுக்கான தமிழ்த் தகுதித்தாள் தேர்வும் நடைபெறுவதாக இருந்தது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22ஆம் தேதி குரூப் 2 பதவிகளுக்கான பாடத்தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு முன்பாகவே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்தனர். சென்னையில் மட்டும் அரும்பாக்கம், நந்தனம் உள்ளிட்ட 7 மையங்களில் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் நடக்கவிருந்தது.

மேலும் படிக்க: அதிகாலையில் தொடரும் பனிமூட்டம்.. படிப்படியாக உயரும் வெப்பநிலை.. வானிலை சொல்வது என்ன?

தேர்வுகள் ஒத்திவைப்பு:

இந்நிலையில், சென்னை அரும்பாக்கம் தேர்வு மையத்தில் தேர்வர்களுக்கான பதிவு எண்கள் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டது. நந்தனம் தேர்வு மையத்தில் 9 மணியை கடந்தும் வினாத்தாள் வரவில்லை என புகார் எழுந்தது. அதோடு, தேர்வெழுத அனுமதிக்கப்படாததால் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, குளறுபடி காரணமாக குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மாற்று நாளில் நடைபெறும் என்றும், அதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us