Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விருப்ப மனுக்கள் பெறுவதில் தவெகவினர் ஆர்வம்.. 20,000 பேர் பதிவிறக்கம்.. முடங்கிய இணையதளம்..

தங்களது குடியிருப்பு பகுதிகளுக்குள் தாங்களே அனுமதிக்கப்படுவதில்லை, பல்வேறு வழிகளும் தவெகவினரால் முடக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விருப்ப மனுக்களை வாங்க, நேரில் வர வேண்டாம் இணையதளம் மூலம் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தவெக தலைமை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

விருப்ப மனுக்கள் பெறுவதில் தவெகவினர் ஆர்வம்.. 20,000 பேர் பதிவிறக்கம்.. முடங்கிய இணையதளம்..
தவெக விருப்ப மனு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 08 Feb 2026 06:39 AM IST

சென்னை, பிப்ரவரி 08: இணையதளத்திலும் போட்டி போட்டி வருப்ப மனுக்களை தவெகவினர் பதிவிறக்கம் செய்தனர். தவெக விருப்ப மனுக்களை வாங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி, விருப்ப மனுக்களை வாங்கி அதிக அளவு கூட்டம் கூடியதால் பனையூரே ஸ்தம்பித்தது. இதனால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் அவதியடைந்ததோடு போலீசாரிடம் தங்களுக்கு மிகவும் தொந்தரவு ஏற்படுவதாக புகார் அளித்தனர். மேலும், தங்களது குடியிருப்பு பகுதிகளுக்குள் தாங்களே அனுமதிக்கப்படுவதில்லை, பல்வேறு வழிகளும் தவெகவினரால் முடக்கப்பட்டிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிக்க: தவெக விருப்ப மனு பெற போட்டா போட்டி.. முதல் நாளிலேயே 10 ஆயிரம் பேர் வாங்கினர்..

ஆன்லைனில் விருப்ப மனு:

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விருப்ப மனுக்களை வாங்க, நேரில் வர வேண்டாம் இணையதளம் மூலம் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. விருப்ப மனு பெற விரும்பும் கழகத் தோழர்கள், பின்வரும் இணைப்பைப் பயன்படுத்தி விருப்ப மனுவைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. https://drive.google.com/file/d/1Y9PfGCXvzVTbJ6B6S128PKJZE7laWgiK அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும்.

பிப்.14ம் தேதி கடைசி தேதி:

இவற்றை ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியான பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நேரிலோ, கொரியர் / தபால் மூலமோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல், விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டவர்கள் மனுக்களை நிரப்பி வழங்கும்போது, கட்டண தொகையாக பொது தொகுதிக்கு ரூ.10,000, தனித்தொகுதிக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : விஜய்க்கு அபராதம் விதித்ததில் எந்த விதமீறலும் இல்லை.. ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்.. உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

முடங்கிய இணையதளம்:

இந்த அறிவிப்புக்கு பின்னரும், நேற்றைய தினம் விருப்ப மனுக்களை பெற, மனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு ஏராளமான தொண்டர்கள் வேன்களிலும், காரிலும் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, அனுப்பி வைத்தனர். இதனால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனிடையே, தவெக கட்சி இணையதளம் மூலம் ஏராளமானவர்கள் நேற்று விருப்ப மனுக்களை பதிவிறக்கம் செய்ததால் அந்த இணையதளமே முடிங்கியது. நேற்று ஒரே நாளில் 20,000க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.