AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இயக்குநர் அருண் குமார் இயக்கும் படத்தை கமல் ஹாசனே தயாரித்து நடிக்கிறார்?

Kamal Haasan next movie update | நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் நடிக்கும் படத்தை அவரே தயாரித்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குநர் அருண் குமார் இயக்கும் படத்தை கமல் ஹாசனே தயாரித்து நடிக்கிறார்?
கமல் ஹாசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Aug 2026 16:38 PM IST

தமிழ் சினிமாவில் சுமார் 66 ஆண்டுகளை நிறைவு செய்து 67-வது ஆண்டில் பயணித்து வருகிறார் நடிகர் கமல் ஹாசன். தனக்கு 6 வயது இருக்கும் போதே நடிக்கத் தொடங்கிய நடிகர் கமல் ஹாசன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல அவதாரங்களை எடுத்துள்ளார். அதன்படி நடிகர் கமல் ஹாசன் தமிழ் சினிமாவில் பல உலகதரம் வாய்ந்த விசங்களை புகுத்தி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். மேலும் நாயகனாக மட்டும் இன்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என இவர் சினிமாவில் செய்யாத வேலைகளே இல்லை என்று சொல்லலாம். அப்படி சினிமாவிற்காகவே தனது வாழ்க்கையை அற்பணித்த கமல் ஹாசனை ரசிகர்கள் உலக நாயகன் என்று கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடிப்பது மட்டும் இன்றி தயாரித்தும் உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் இறுதியாக தக் லைஃப் என்ற படம் கடந்த 2025-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வகையில் நடிகர் கமல் ஹாசனின் நடிப்பில் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்க உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைர்லாகி வருகின்றது.

அருண் குமார் இயக்கும் படத்தை கமல் ஹாசனே தயாரித்து நடிக்கிறார்?

அடுத்ததாக, கமல்ஹாசன் நடித்துத் தயாரிக்கும் படத்தை எஸ்.யு. அருண் குமார் இயக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்துடன் சேர்த்து, கமல்ஹாசன் மற்றொரு படத்திலும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் குறித்த கூடுதல் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். சுவாரஸ்யமாக, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் ‘KH x RK’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also read… Samantha: டிவி ஷோவில் தொகுப்பாளராக களமிறங்கிய சமந்தா.. எந்த நிகழ்ச்சி தெரியுமா?

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also read… பிரபாஸின் ஃபௌசி படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

Follow Us