Rio Raj: அஜித் சாரிடமிருந்து அதை தெரிஞ்சிக்க வேண்டும் என எனக்கு ஆசை – ரியோ ராஜ் பேச்சு!
Rio Raj on Ajith Kumar: சின்னத்திரை நடிகராக இருந்து, தற்போது தொடர்ந்து சினிமாவில் படங்களில் நடித்துவருபவர் ரியோ ராஜ். இவர் நடிப்பில் ராம் இன் லீலா என்ற திரைப்படமானது உருவாகியுள்ள நிலையில், விரைவில் வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் நேர்காணலில் பேசிய அவர், நடிகர் அஜித்திடமிருந்து தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விஷயம் பற்றி கூறியுள்ளார்.
சின்னத்திரை நடிகராகவும், தொகுப்பாளராகவும் தனது வாழ்க்கையை தொடங்கி, தற்போது சினிமாவில் நாயகனாக நடித்துவருபவர் ரியோ ராஜ் (Rio Raj). இவர் விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீசன் 3 சீரியலில் நாயகனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த சீரியலுக்கு பின் திரைப்படங்களில் நடிக்கவேண்டும் என்ற ஆசையை கொண்ட ரியோ, 2017ம் ஆண்டில் விக்ரம் பிரபுவின் (Vikram Prabhu) நடிப்பில் வெளியான சத்ரியன் (Sathriyan) என்ற படத்தில் துணை வேடத்தில் நடித்தார். பின் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” (Nenjamundu Nermaiyundu Odu Raja) என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 2019ம் ஆண்டில் வெளியான இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை.
இந்த படத்திற்கு பின் படங்களில் தொடர்ந்து நடிகராகவே நடிக்க தொடங்கிவிட்டார். 2026ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் படம்தான் ராம் இன் லீலா (Ram In Leela). அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய ரியோ, நடிகர் அஜித் குமார் குறித்து பேசியுள்ளார். அஜித் குமாரிடமிருந்து தான் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.




இதையும் படிங்க: இன்னுமா என்ன தெரியல.. ஓராண்டை கடந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி… படக்குழு வெளியிட்ட பதிவு!
நடிகர் அஜித் குமார் குறித்து பேசிய நடிகர் ரியோ ராஜ்:
அந்த நேர்காணலில் பேசிய ரியோ ராஜ், “தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களில், அஜித் சார் என்ன யோசிக்கிறார் என அவருக்கு மட்டுமே தெரியும். சிலர் அவர் என்னப்பா ரேஸ் ஓட்டுறாரு, குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவேண்டும் என நினைக்கிறார் என அனைவருக்கும் தோன்றும். ஆனால், அஜித் குமார் சாரின் சரியான மனநிலை என்னவாக இருக்கும். அவர் சினிமாவில் கதைகளை கேட்கும்போது, என்ன நினைப்பார் என தெரிந்துகொள்ளவேண்டும் என எனக்கு ஒரு ஆசை” என அதில் அவர் கூறியுள்ளார்.
ராம் இன் லீலா திரைப்படம் குறித்து நடிகர் ரியோ ராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Meet the madness, match the mood. 🔥#RamInLeela official trailer OUT NOW
▶️https://t.co/OfWPx8RGPD@rio_raj @tridentartsoffl @eywaent @sude_v @sanjayvijayragh @srikumaranfilms @ramachandr5017 @thinkmusicindia @apinternational @024vartika @i_nayan_aElza pic.twitter.com/wL0S9V1PZH
— Rio raj (@rio_raj) August 12, 2026
நடிகர் ரியோ ராஜ், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் நடித்துள்ள புது படம் ராம் இன் லீலா. அதிரடி காதல் மற்றும் சிறப்பான காமெடி கதைக்களத்தில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ரியோவுக்கு ஜோடியாக நடிகை வர்த்திகா ஜெயின் நடித்துள்ளார். அவருடன் பாலாஜி தியாகராஜன் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: சூர்யாவின் பிரசன்னமும்.. மமிதாவின் குறும்பும்.. பேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் விஸ்வநாத் & சன்ஸ் எப்படி இருக்கு?
வித்தியாசமான காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம், வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. அதை முன்னிட்டு இப்படத்தின் ட்ரெய்லர் சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றது. இப்படம் ரியோவுக்கு நல்ல வரவேற்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.