சூர்யாவின் பிரசன்னமும்.. மமிதாவின் குறும்பும்.. பேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் விஸ்வநாத் & சன்ஸ் எப்படி இருக்கு?
Vishwanath And Sons Review: சூர்யாவின் 46வது படமாக வெளியாகியுள்ளதுதான் விஸ்வநாத் & சன்ஸ். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி நேரடியாக தமிழில் இயக்கியுள்ள இந்த திரைப்படம், இன்று (14/08/2026) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனங்கள் குறித்து தெளிவாக பார்க்கலாம்.
தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் வெங்கி அட்லூரி (Venky Atluri). இவர் தமிழில் நேரடியாக இயக்கியிருக்கும் முதல் திரைப்படம்தான் விஸ்வநாத் & சன்ஸ் (Vishwanath And Sons). இந்த படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கோலிவுட் நாயகன் சூர்யா (Suriya) லீட் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இப்படம் முழுக்க பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த படமானது ஆரம்பத்தில் சூர்யா46 என அறிவிக்கப்பட்ட நிலையில், பின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என டைட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் உலகமெங்கும் விஸ்வநாத் & சன்ஸ் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்திருக்கும் எக்ஸ் விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் சாரை முதன்முதலில் சந்தித்த போது… நடிகை ஸ்ரேயா சரணின் சுவாரஸ்ய பேச்சு
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்திற்கு கிடைத்த எக்ஸ் விமர்சனங்கள்:
#VishwanathAndSons – Excellent First Half, Followed by an Decent Second half🤝
A Complete Feel Good entertainer overloaded with Many Fun moment and a bit of emotional sequences👌
Providing an apt climax was the toughest one for the film, but it was perfectly mounted by… pic.twitter.com/qCsu1YcKEC
— AmuthaBharathi (@CinemaWithAB) August 14, 2026
சூர்யா விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் சஞ்சய் விஸ்வநாத் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ குறும்புகள் செய்யும் Maddy என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது முழுக்க வேடிக்கை, உணர்ச்சிகள், காதல் மற்றும் அதிரடி ஆக்ஷன் தருணங்களால் நிரம்பியுள்ளதாம். ஒரு பக்கா பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் சூர்யா மற்றும் மமிதாவின் காம்போ எப்படி இருக்கு:
விஸ்வநாத் & சன்ஸ் படத்தில் சூர்யா 40 வயது பிஸ்னஸ் மேனாகவும், மமிதா ஒரு குறும்பு செய்யும் 20 வயது பெண்ணாகவும் நடித்துள்ளார். இதில் மமிதா நடித்திருக்கும் Maddy கதாபாத்திரத்திற்கு அவரே பொருத்தமானவர். தி ஒன் சூர்யாவின் வசீகரமான பிரசனத்துடன் திரையில் பார்ப்பது புத்துணர்ச்சியாக இருக்கிறது. மமிதா மற்றும் ராதிகாவின் காம்போவும் இப்படத்தில் சிறப்பாக இருக்கிறது.
இதையும் படிங்க: சுப்ரமணியபுரம் 2 படம் உருவாகுமா? சசிகுமார் விளக்கம்!
விஸ்வநாத் & சன்ஸ் படம் எப்படி இருக்கு:
முதல் பாதி முழுக்க முழுக்க வேடிக்கையாக இருந்தது, அதே சமயம் இரண்டாம் பாதியில் வேடிக்கை மற்றும் உணர்ச்சிகள் இரண்டும் இருந்தன. மேலும் 2வது பாதியில் சில குறைகளும் இருக்கிறது. இந்த படத்தில் மாபெரும் தூணாக ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையமைப்பும் உள்ளது. சமையலறைக் காட்சி, இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் ஆகியவை படத்தின் சிறப்பம்சமான தருணங்கள்.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை திரையரங்குகளில் பார்க்கலாமா?:
சூர்யாவின் கருப்பு படத்திற்கு பின் சிறப்பான பேமிலி படமாக விஸ்வநாத் & சன்ஸ் உள்ளது. இப்படம் முழுக்க மொத்தத்தில் ஒரு கமர்ஷியல் படம். குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்வையிட்டு என்ஜாய் பண்ணும் படமாக இருக்கும். நிச்சயம் பேமிலி ஆடியன்ஸ் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



