AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சுப்ரமணியபுரம் 2 படம் உருவாகுமா? சசிகுமார் விளக்கம்!

Sasikumar about Subramaniapuram 2 movie | தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நாயகனாகவும் ரசிகரக்ளிடையே பிரபலமானவர் சசிகுமார். தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் அதிக அளவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் சுப்ரமணியபுரம் பார்ட் 2 படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுப்ரமணியபுரம் 2 படம் உருவாகுமா? சசிகுமார் விளக்கம்!
சசிகுமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Aug 2026 08:00 AM IST

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், நாயனகாவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருபவர் சசிகுமார். அதன்படி தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கல்ட் என்று கொண்டாடும் சுப்ரமணியபுரம் என்ற படத்தை எழுதி இயக்கி முக்கிய வேடத்தில் நடித்தார் சசிகுமார். இந்தப் படத்தின் மூலமாகதான் சசிகுமார் தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் படங்களை இயக்குவதை விட அதிக அளவில் நாயகனாக தொடர்ந்து நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சசிகுமார் நடிப்பில் இறுதியாக ஓடிடியில் வெளியானது வதந்தி 2 என்ற இணையதள தொடர்.

இந்த தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் அந்த இணையதள தொடரை தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகும் படங்கள் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் சசிகுமார் அளித்தப் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுப்ரமணியபுரம் 2 படம் உருவாகுமா?

நான் சுப்பிரமணியபுரம் 2 படத்தை இயக்கப்போவதில்லை. பலரும் அதன் அடுத்த பாகத்தை (sequel) எடுக்குமாறு என்னிடம் கேட்டனர். ஆனால், 18 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘சுப்பிரமணியபுரம்’ படத்தை இன்றும் ரசிகர்கள் நேசிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள். அந்த உணர்வை நான் சிதைக்க விரும்பவில்லை. அது அடிப்படையில் ஒரே பாகம் கொண்ட கதையாகவே உருவாக்கப்பட்டது. ‘குற்ற பரம்பரை’ படத்திற்குப் பிறகு, மதுரையை மையமாகக் கொண்ட மற்றொரு படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான திரைக்கதையைத் தயார் செய்துவிட்டேன். முழு கதையும் மதுரையிலேயே நடைபெறுகிறது. அதுவும் சுப்பிரமணியபுரம் பாணியிலான ஒரு படமாகவே இருக்கும் என்று அவர் தெரிவித்தது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இரண்டாம்கட்ட படப்பிடிப்பை தொடங்கியது தர்மன் படக்குழு – வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… முன்னாள் காதலரை அந்நியன் பட கதாப்பாத்திரங்களுடன் ஒப்பிட்டு பேசிய அனுபமா பரமேசுவரன் – வைரலாகும் வீடியோ!

Follow Us