AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Radhika Sarathkumar: சாய் பல்லவியை போல.. மமிதா பைஜூவின் நடிப்பு தன்னை கவர்ந்த விஷயம் குறித்து பகிர்ந்த ராதிகா சரத்குமார்!

Radhika Sarathkumar On Mamitha Baijus Talent: கோலிவுட் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டங்களில் சிறந்த நடிகையாக இருந்துவந்தவர் ராதிகா சரத்குமார். இவர் நடிகர் சூர்யாவின் அம்மாவாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மமிதா பைஜூதான் சரியான தேர்வு என்பது குறித்து அவர் பேசியுள்ளார்.

Radhika Sarathkumar: சாய் பல்லவியை போல.. மமிதா பைஜூவின் நடிப்பு தன்னை கவர்ந்த விஷயம் குறித்து பகிர்ந்த ராதிகா சரத்குமார்!
மமிதா பைஜு பற்றி ராதிகா சரத்குமார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 11 Aug 2026 16:30 PM IST

நடிகை ராதிகா சரத்குமார் (Radhika Sarathkumar) தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.90ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் படங்களில் நாயகியாக நடித்து அசத்தியவர் இவர். தற்போது சினிமாவில் இவர் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அம்மா வேடங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் தாய் கிழவி (Thaai Kizhavi). இதில் ராதிகா சரத்குமார் லீட் நடிகையாக நடிக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan)இயக்கியிருந்தார். கடந்த 2026ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு பின் இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் ராதிகா நடித்துவந்த படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath and sons).

இதில் நடிகர் சூர்யா லீட் நாயகனாக நடிக்க, அவரின் தாயாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் நடிகையாக மமிதா பைஜூ நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ராதிகா சரத்குமார், மமிதா பைஜூவின் நடிப்பு மற்றும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் சரியான தேர்வு என்பது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஆடி வெள்ளி பூத்திருச்சு… சிவகார்த்திகேயனின் சேயோன் பட 2வது ஷெட்யூல் இன்று தொடங்கிருச்சு!

மமிதா பைஜூவின் நடிப்பு குறித்து பகிர்ந்த ராதிகா சரத்குமார்:

அந்த நேர்காணலில் சூர்யா, மமிதா பைஜூ மற்றும் வெங்கி அட்லூரி என பலரும் கலந்துகொண்டிருந்தனர். அப்போது பேசிய ராதிகா சரத்குமார், “வெங்கி இந்த கதையை என்னிடம் சொல்லும்போது, இப்படத்தில் நடிகையாக யார் நடிக்கிறா?, யார் நடிக்கவுள்ளார் என்பது ரொம்பவே முக்கியம் என சொன்னேன். அவரு உடனே என்னிடம், “எப்படியும் பிடித்துவிடுவேன்” என சொன்னாரு. ஒரு நாள் எனக்கு கால் பண்ணி, “நடிகையுடன் வருகிறேன்” என சொனார். உடனே யார் அந்த நடிகை? என நான் கேட்டேன், அவர் அதற்கு, “மமிதா பைஜூ” என சொன்னாரு. நான் ஏற்கனவே டியூட் பட ஷூட்டிங்கில் மமிதா பைஜூவை பார்த்திருக்கிறேன். அப்போதுதான் முதலில் பார்த்தேன்.

இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?- வைரலாகும் தகவல்!

அப்போது அவரின் நடிப்பு குறித்து நான் எதுவும் நினைக்கவில்லை. மேலும் வெங்கி, எங்களுக்கு கடினமான காட்சி ஒன்று கொடுத்தார், நாங்கள் இருவரும் வாக்குவாதம் செய்வதுபோல ஒரு காட்சி. அந்த காட்சியில் நடித்த 2வது நிமிடமே வெங்கியிடம், “நீங்கள் நல்ல நடிகையை கண்டுபிடிச்சிடீங்க-னு” சொன்னேன். அவரின் நடிப்பு இந்த படத்தில் நன்றாகவே இருந்தது. நான் இதுபோல ஒரு சில நடிகைகளிடம் மட்டுமே பார்த்திருக்கிறேன். சாய் பல்லவி மாதிரி சில நடிகைகளிடம் மட்டுமே இந்த திறமையை பார்த்திருக்கிறேன். மேலும் மமிதா பைஜூ ஒரு சிறந்த டான்சர்” என அதில் தெரிவித்தார்.

மமிதா பைஜூ குறித்து நடிகை ராதிகா சரத்குமார் பேசியது தொடர்பான எக்ஸ் பதிவு:

சூர்யா, மமிதா பைஜூ மற்றும் ராதிகா சரத்குமாரின் நடிப்பில் உருவான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது. பேமிலி பொழுதுபோக்கு கதையில் உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us