இயக்குநர் வெங்கி அட்லூரியின் முதல் சம்பளம் இத்தனை லட்சமா? வைரலாகும் வீடியோ
Director Venky Atluri First Salary Details Viral On Social Media | தென்னிந்திய மொழிகளில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் தனது முதல் சம்பளம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது அதிக அளவில் செய்திகளில் இடம் பிடித்து வரும் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவர் தெலுங்கு சினிமா இயக்குநராக இருந்தாலும் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி தான் எழுதி இயக்கி உள்ளார். இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திலும் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் படக்குழுவினர் நடிகர்கள் தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் வெங்கி அட்லூரி தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு செய்தி நிறுவனங்களை பேட்டிகளை அளித்து வருகிறார். அந்தப் பேட்டியில் தற்போது வெளியாக உள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் குறித்து மட்டும் அல்லாமல் தனது கடந்த கால படங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் வெளிப்படையாக பேசி வருகின்றார்.




இயக்குநர் வெங்கி அட்லூரியின் முதல் சம்பளம் இத்தனை லட்சமா?
அந்த வகையில் சமீபத்தில் இயக்குநர் வெங்கி அட்லூரி கலந்துகொண்டு அளித்த பேட்டி ஒன்றில் அவரது முதல் சம்பளம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குநர் வெங்கி அட்லூரி தான் முதன் முதலாக இயக்கிய தொலி பிரேமா என்ற படத்திற்கு 24 லட்சம் ரூபாய் சம்பளம் பெற்றதாக தெரிவித்தார். மேலும் அந்த சம்பளத்தில் தனது அம்மாவிற்கு தங்க நகை வாங்கி கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Nivin Pauly: நிவின் பாலிக்கு ஜோடியாகும் ருக்மிணி வசந்த்.. பூஜையுடன் தொடங்கியது NP51 பட ஷூட்டிங்!
இணையத்தில் வைரலாகும் வெங்கி அட்லூரியின் பேச்சு:
First Film Salary Was ₹24 Lakhs! 😮
– ‘Venky Atluri’🔥 pic.twitter.com/b6kKv9Wyez— Tharani ʀᴛᴋ (@iam_Tharani) August 9, 2026
Also Read… Suriya: விஸ்வநாத் & சன்ஸ் பட நடிகையின் முதல் தேர்வே மமிதாதான் – சூர்யா!