AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிக பார்வைகளைப் பெற்ற பட்டாம்பூச்சி பாடல் – ஜிவி பிரகாஷ் வெளியிட்ட பதிவு

Pattampoochi Lyric Video | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் விஸ்வநாத் & சன்ஸ். இந்தப் படத்தில் இருந்து வெளியான பட்டாம்பூச்சி என்ற பாடல் யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளதாக இசையமைப்பாளர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிக பார்வைகளைப் பெற்ற பட்டாம்பூச்சி பாடல் – ஜிவி பிரகாஷ் வெளியிட்ட பதிவு
பட்டாம்பூச்சி பாடல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Aug 2026 13:41 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நாயகனாகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்துப் படங்களில் நாயகனாகவும் இசையமைப்பாளராகவும் பிசியாக பணியாற்றி வரும் ஜிவி பிரகாஷ் குமார் தற்போது நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் படத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் பணியாற்றி வருகிறார். முன்னதாக இவர்களின் கூட்டணியில் வெளியான வாத்தி மற்றும் லக்கி பாஸ்கர் என இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இந்த கூட்டணி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ள இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் அவருடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

அதிக பார்வைகளைப் பெற்ற பட்டாம்பூச்சி பாடல்:

இந்த நிலையில் படத்தில் இருந்து முன்னதாக மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக பட்டாம்பூச்சி என்ற முதல் சிங்கிள் வீடியோ தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் யூடியூபில் இதுவரை 52 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இது தொடர்பாக படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் போஸ்டர் ஒன்றை பதிவிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Allu Arjun: ராக்கா பட ஷூட்டிங் எங்கு நடக்கிறது.. அப்டேட் கொடுத்த அல்லு அர்ஜுன்!

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… வெளியீட்டிற்கு 5 நாட்களே உள்ளது… விஸ்வநாத் & சன்ஸ் படக்குழு வெளியிட்ட புது போஸ்டர்!

Follow Us