AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்த படத்துடன் விஸ்வநாத் & சன்ஸ் படத்தை ஒப்பிடாதீர்கள் – இயக்குநர் வெங்கி அட்லூரி

Director Venky Atluri recent interviews | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அந்த படத்துடன் விஸ்வநாத் & சன்ஸ் படத்தை ஒப்பிடாதீர்கள் – இயக்குநர் வெங்கி அட்லூரி
இயக்குநர் வெங்கி அட்லூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Aug 2026 11:03 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளாக பெரிய அளவில் வெற்றியைக் கொடுக்க முடியாமல் இருந்தார் நடிகர் சூர்யா. தொடர்ந்து இவரது நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் இருந்தது. இப்படி இருக்கும் சூழலில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் முதலாவதாக வெளியான கருப்பு ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நாயகனாக நடித்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் சினிமா கெரியரில் இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்த படமாக இது அமைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படம் இந்த 2026-ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியாகி பான் இந்திய மொழிகளில் அதிக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாக வரிசையாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் வருகின்ற 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

அந்த படத்துடன் விஸ்வநாத் & சன்ஸ் படத்தை ஒப்பிடாதீர்கள்:

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகின்றது. அதன்படி இவர் பேசியதாவது, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தை கருப்பு திரைப்படத்துடன் ஒப்பிட முடியாது. அது ஒரு கற்பனைத் திரைப்படம். அநேகமாக அதனால்தான் அந்த வரிசையில் அவர் படங்களைத் திட்டமிட்டிருக்கலாம். 2010-களில் பார்த்தால், அவர் எப்போதும் மாஸ் மற்றும் கிளாஸ் ரகப் படங்களை மாறி மாறித் திட்டமிட்டு வெளியிடுவார். அதனால்தான் குடும்பப் பார்வையாளர்கள் மற்றும் வெகுஜனப் பார்வையாளர்கள் என இரு தரப்பினரின் ஆதரவையும் அவரால் பெற முடிந்தது. குழந்தைகளும் அவரை மிகவும் விரும்பினார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… கவின் – நயன்தாராவின் ஹாய் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… இணையத்தில் வைரலாகும் விஷாலின் மகுடம் பட ட்ரெய்லர்

Follow Us