அந்த உறவு காமெடியாகவும் – சர்ச்சையாகவும் பார்க்கப்படுகின்றது… இயக்குநர் வெங்கி அட்லூரி
Director Venky Atluri talks about age-gap relationships | பான் இந்திய மொழிகளில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் வயது வித்யாசம் அதிகம் உள்ள காதல் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கு மொழியில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் தனது இயக்குநர் பணியைத் தொடங்கினார் இயக்குநர் வெங்கி அட்லூரி. இவரது இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2023-ம் ஆண்டு முதல் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதன்படி நடிகர் தனுஷின் நடிப்பில் வெளியான வாத்தி என்ற படத்தினை இயக்கி இருந்தார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவானது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இயக்குநர் வெங்கி அட்லூரி பிரபலம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இயக்குநர் வெங்கி அட்லூரி தற்போது எழுதி இயக்கி உள்ள படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. மேலும் இயக்குநர் வெங்கி அட்லூரி படம் குறித்து வெளிப்படையாக பேசுவதும் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




அந்த உறவு காமெடியாகவும் – சர்ச்சையாகவும் பார்க்கப்படுகின்றது:
அந்தப் பேட்டியில் இயக்குநர் வெங்கி அட்லூரி பேசியதாவது, வயது வித்தியாசமுள்ள உறவுகள் பெரும்பாலும் நகைச்சுவைக்காகவோ அல்லது சர்ச்சைகளுக்காகவோ சித்தரிக்கப்படுகின்றன. ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மூலம், நான் கண்ணியத்துடனும் உணர்வுப்பூர்வமான நேர்மையுடனும் ஒரு கதையைச் சொல்ல விரும்பினேன். மாமிதா பைஜுவின் உணர்வுகள் போற்றுதலில் இருந்து வெளிப்படுகின்றன, அதே சமயம் சூர்யா முதிர்ச்சி, பொறுப்பு மற்றும் மரியாதையுடன் பதிலளிக்கிறார் என்று அந்தப் பேட்டியில் வெங்கி அட்லூரி தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் அதிக அளவில் பேசப்பட்டு வருகின்றது.
Also Read… ஜீவாவாக மாளவிகா மோகனன்.. ரசிகர்கள் மத்தியில் வைரலாகும் பாக்கெட் நாவல் பட BTS வீடியோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Dir #VenkyAtluri
– Age gap relationships are often portrayed as either comic relief or scandal. With #VishwanathAndSons, I wanted to tell a story with dignity and emotional honesty.
– #Mamitha‘s feelings come from admiration, while #Suriya responds with maturity, responsibility,…— Movie Tamil (@_MovieTamil) August 7, 2026
Also Read… An Ordinary Man டைட்டில் படத்தின் முதல் சாய்ஸ் இல்லை – இயக்குநர் ரவி மோகன்