Ram In Leela: ரியோவின் ராம் இன் லீலா திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
Ram In Leela Movie Release Date: தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரியோ ராஜ். இவரின் நடிப்பில் சிறப்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள புது திரைப்படம் ராம் இன் லீலா. இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துவந்த நிலையில், தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரியோ ராஜ் (Rio raj). இவர் ஆண்டுக்கு ஒரு திரைப்படம் என்ற வகையில் படங்களில் பணியாற்றி வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஆண் பாவம் பொல்லாதது (Aan Paavam Pollathathu) . கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தின் வரவேற்பிற்கு பின், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் (Ramachandrran Kannan) இயக்கத்தில், உருவாகிவந்த புது படம்தான் ராம் இன் லீலா (Ram In Leela). இப்படம் அதிரடி ரோமெண்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இதில் ரியோ ராஜ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை வர்திகா (Varthika) நடித்துள்ளார். இந்த படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவந்த நிலையில், ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான பதிவை ரியோ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: அன்பே சிவம் படத்திற்கு நோ சொல்ல இதுதான் காரணம் – கே.எஸ்.ரவிக்குமார்
ரியோ ராஜின் ராம் இன் லீலா படத்தின் ரிலீஸ் தேதி:
ஆண்பாவம் பொல்லாதது படத்திற்கு பின் ரியோ ராஜ் சிறப்பாக நடித்துவந்த படம்தான் ராம் இன் லீலா. இந்த படம் ரோம்-காம் கதைக்களத்தில் உருவாக்கப்பட்ட நிலையில், இதன் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த படத்தில் ரியோ ராஜ் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்க, ட்ரைடெட் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமானது தயாரித்துள்ளது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கார்த்திக் சுப்பராஜின் டோரதி படத்தின் டீசரை வெளியிட்ட தனுஷ் – வைரலாகும் வீடியோ
ரியோ வெளியிட்ட ராம் இன் லீலா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு பதிவு:
Buckle up for the ultimate madness overload! 🚗🔥
Ram in Leela — In Cinemas Worldwide from AUGUST 21! ⚡@rio_raj @tridentartsoffl @eywaent @sude_v @sanjayvijayragh @ramachandr5017 @thinkmusicindia @apinternational @024vartika @i_nayan_aElza @mallikarjundp pic.twitter.com/cSUBe05V0h— Rio raj (@rio_raj) August 6, 2026
இந்த ராம் இன் லீலா படமானது ரோம்- காம் கதையில் உருவாகியுள்ள நிலையில், இதற்கு இசையமைப்பாளர் அங்கீத் மேனன் இசையமைத்துள்ளார். இவர் ஜெய ஜெய ஜெய ஹே என்ற மலையாள படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றி பிரபலமானவர். இவர் ராம் இன் லீலா படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், இதுவரை இரு பாடல்கள் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது இதன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், டீசர் மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.