கில்லர் படத்தில் என்னை முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ரசிகர்கள் காண்பார்கள் – நடிகை ப்ரீத்தி அஸ்ரானி
Preethi Asrani Recent Interview Viral On Social Media | தென்னிந்திய மொழிகளில் தற்போது பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் கில்லர் படம் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் தற்போது தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தெலுங்கு சினிமாவில் நடிக்கத் தொடங்கி தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2023-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவிலும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். நடிகை ப்ரீத்தி அஸ்ராணி தமிழ் சினிமாவில் அயோத்தி என்ற படத்தின் மூலம் நடிக்கத் தொடங்கினார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகை ப்ரீத்தி அஸ்ரானி தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்துப் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது. அந்த வகையில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் 29. ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார்.
கில்லரில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ரசிகர்கள் காண்பார்கள்:
இந்த நிலையில் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி சமீபத்தி அளித்தப் பேட்டி ஒன்றில் பேசியதாவது, எனது நடிப்புத் திறமை குறித்து எனக்கு எப்போதும் எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை. ஆனால், திரைப்படம் எனக்கு முற்றிலும் புதியதொரு வகையைச் சேர்ந்தது. இது வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம் அல்ல; அதிரடிச் சண்டைக் காட்சிகள் நிறைந்த ஒரு கதாபாத்திரம். அதனால்தான் படக்குழுவினர் ஒரு ஆடிஷன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். அந்த ஆடிஷன் மூலம் நான் தேர்ந்தெடுக்கப்பட்டு, இப்படத்தின் ஒரு பகுதியாக இணைந்தேன். எனது முந்தைய திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில், படத்தில் பிரீத்தியை முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்தில் ரசிகர்கள் காண முடியும் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… மணிகண்டனின் புதுப் படத்தின் டைட்டில் மக்கள் காவலன் – வைரலாகும் போஸ்டர்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#PreethiAsrani Recent:
I never had any doubts about my acting ability. But Killer is a completely new genre for me. It’s not the usual heroine role—it’s a character with a lot of action. That’s why the team insisted on an audition. I was selected through that audition and became… pic.twitter.com/Ui1klsX1JZ
— Movie Tamil (@_MovieTamil) August 6, 2026
Also Read… சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்



