பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி 3-வது வாரம் மோதலுடன் தொடங்கியுள்ளது – வைரலாகும் புரோமோ வீடியோ
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்கள் முடிவடைந்து தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்றைய புரோமோ வீடியோவில் இந்த வாரம் சண்டையுடனே தொடங்குவது போல காட்டப்பட்டுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 06-ம் தேதி 2026-ம் ஆண்டு தொடங்கியது. மிகவும் பிரமாண்டமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சியினை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 19 போட்டியாளர்கள் தொடக்கத்தில் வீட்டில் உள்ளே அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து முதல் வாரம் உடல் நலக் குறைவு காரணமாக ப்ளாக் பாண்டி வெளியேறிய நிலையில் மற்ற போட்டியாளர்களால் சாவன்யா வேலு வெளியேற்றப்பட்டார். அவர்களின் இரண்டு பேருக்கு பதிலாக மணிவண்ணன் மற்றும் ஆனந்தி இருவரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சிக்கு உள்ளே அனுப்பப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டாவது வாரத்தில் ஜாவித் வீட்டில் உள்ள போட்டியாளர்களால் எவிக் செய்யப்பட்டு வெளியேறிய நிலையில் நேற்று மணிவண்ணன் கடந்த வாரத்திற்கான எவிக்ஷன் ப்ராசசில் குறைவான வாக்குகளைப் பெற்றதால் வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் 17 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த வாரம் என்ன எல்லாம் நடக்க உள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முதல் புரோமோவே மோதல் தொடங்கியதை காட்டியுள்ளது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி 3-வது வாரம் மோதலுடன் தொடங்கியது:
அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு இன்று 15-வது நாளிற்கான முதல் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இந்த வாரம் கேப்டனாக அவினாஷ் தேர்வாகியுள்ளது தெரிகிறது. மேலும் ஒவ்வொரு அணிகளை பிரிக்கும் போது ஆளும் அணிக்கும் எதிரணிக்கும் இடையே சண்டை நிகழ்வது அந்த வீடியோவில் தெரிகிறது. அணிகள் பிரிக்கும் போதே சண்டை என்றால் இந்த வாரம் சண்டைக்கு பஞ்சமே இருக்காது என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read… உருவகேலிக்கு பதிலடி.. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சட்டையை கழற்றி மேக்கப் அகற்றிய சல்மான்கான்..
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day15 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision ” pic.twitter.com/vnexVfiryU
— Vijay Television (@vijaytelevision) September 21, 2026
Also Read… டாஸ்கில் மோதிக்கொண்ட ஷமா – ஜேசன்… இவ்வளவு கோபம் எதற்கு? கேள்வி எழுப்பிய விஜய் சேதுபதி


