AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வெளியானது ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ பட டிரெய்லர்

Jason Sanjay’s Sigma Trailer : முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘சிக்மா’ படத்தின் அதிரடி டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்சன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

வெளியானது ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ பட டிரெய்லர்
சந்தீப் கிஷன்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Sep 2026 21:53 PM IST

முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘சிக்மா’ படத்தின் அதிரடி டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்சன் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

கத்திக்கும் சிக்மா படத்துக்கும் உள்ள தொடர்பு

சிக்மா படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. முன்னதாக முதல்வர் விஜய் நடித்த கத்தி படம் தான் லைக்கா நிறுவனம் தயாரித்த முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராகும் முதல் படத்தை லைக்கா தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் டத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா செப்டம்பர் 18, 2026 இன்று நடைபெற்றது.  இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று நடைபெற்றது. சரியாக 12 வருடங்களுக்கு பிறகு ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தின் இசை வெளியீட்டு விழாவும் செப்டம்பர் 18, 2026 இன்று நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க : ஆனந்தியின் பேச்சு மோதலாகுமா..? லட்சுமி பிரியா – ஆனந்தியின் மத்தியில் வலுக்கும் மோதல்!!

சிக்மா பட டிரெய்லர்

 

சிக்மா பட டிரெய்லரை பாராட்டிய ராஜமௌலி

சிக்மா படத்தின் டிரெய்லரை இயக்குநர் ராஜமௌலி பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பானது. இதில் சிக்மா பட டிரெய்லரை பார்க்கும் ராஜமௌலி அவருக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டு தெரிவித்துள்ளார்.  இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க : Vettuvam: மக்களுக்கான தலைவனை தேந்தெடுக்கும் போட்டி.. வெளியானது ‘வேர்ல்ட் ஆப் வேட்டுவம்’ கிளிம்ப்ஸ்!

மேலும், இப்படத்தில் ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராகுல் சங்கிருத்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜேசன் சஞ்சயின் முதல் படமாக உருவாகியுள்ளதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Follow Us