ஆனந்தியின் பேச்சு மோதலாகுமா..? லட்சுமி பிரியா – ஆனந்தியின் மத்தியில் வலுக்கும் மோதல்!!
Bigg Boss Tamil S10: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி இரு வாரங்களான நிலையில், தற்போது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் ஆனந்தி மற்றும் லட்சுமி பிரியா இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அந்த மோதல் குறித்து மீண்டும் லட்சுமி பிரியாவிடம் ஆனந்தி பேசும் புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழில் அதிக டிஆர்பி கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் (Bigg Boss) இந்த நிகழ்ச்சியானது தமிழில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவருகிறது. ஆண்டுக்கு ஒரு சீசன் என இதுவரை மொத்தமாக 9 சீசங்களுக்கும் மேல் தமிழில் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கியிருந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்ற சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி மொத்தம் 19 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில், பிளாக் பாண்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேற்றப்பட்டிருந்தார். இதற்கு பின் 2 வாரத்தில் இரண்டு வைல்ட் கார்ட் என்ட்ரி போட்டியாளர்களும் நுழைந்துள்ளார். ஆனந்தி மற்றும் மணிவண்ணன் என இருவர் நுழைந்த நிலையில், இந்த இருவருமே நுழைந்த முதல் நாளே சக போட்டியாளர்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தியிருந்தார்.
சமீபத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில் லட்சுமி பிரியா மற்றும் ஆனந்தி இருவரிடையேயும் மோதல் ஏற்பட்டிருந்தது. இது குறித்த இணையத்தில் வைரலாக பேசப்பட்ட நிலையில், மீண்டும் அந்த பிரச்சனை குறித்து லட்சுமி பிரியாவிடம் ஆனந்தி பேசிய புரோமோ இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.




இதையும் படிங்க: நான் பார்த்த சட்டமன்றக் காட்சிகளில் அவர் கலக்கி வருகிறார்.. முதல்வர் விஜய் குறித்து பேசிய நானி!
லட்சுமி பிரியாவிடம் மீண்டும் வம்பிலூக்கும் ஆனந்தி:
சமீபத்தில் டாஸ்க் ஒன்றில் லட்சுமி பிரியா மற்றும் ஆனந்தி இருவருக்குலேயும் பலத்த மோதல் இருந்தது. அதில் இருவருக்குமே காயங்கள் ஏற்பட்டிருந்தது. அது குறித்து மீண்டும் லட்சுமி பிரியாவிடம் ஆனந்தி பேசியுள்ளார். அந்த டாஸ்க் கொடூரமாக என உங்களுக்ள்க்கு தெரியாமல்தான் அந்த விஷயத்தை பண்ணீங்களா? என ஆனந்தி கேட்க லட்சுமி பிரியவும் தன்பக்கத்தின் நியாயத்தை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முனியம்மாவால் முட்டிபோட்டு நடக்கும் வினோத் பாபு.. என்ன நடக்குது பிக்பாஸில்…?
மேலும் வெளியே போய்விட்டு அந்த சண்டை நடந்த வீடியோவை பாருங்க, அது எப்படி இருந்தது என தெரியும் என லட்சுமி பிரியாவிடம் பகையை ஏற்படுத்தும் விதமாக ஆனந்தி பேசியுள்ளார். இது தொடர்பான ப்ரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஆனந்தி மற்றும் லட்சுமி பிரியா இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனை பற்றி பேசிய புரோமோ வீடியோ:
#Day12 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/jO995Vn33w
— Vijay Television (@vijaytelevision) September 18, 2026
பிக் பாஸ் சீசன் 10 தொடங்கிய நாளிலிருந்தே அடிதடி சண்டைகள் மற்றும் சக போட்டியாளர்களிடையே திமிரை கட்டுதல் என ஒரு வித்தியாசமாகவே இருந்துவருகிறது. 2வது வாரத்தை நெருங்கிய நிலையில், இந்த வாரத்தில் எந்த போட்டியாளர் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.