அடுக்கடுக்காக டாஸ்க் கொடுத்த வினோத் பாபு.. அதிரடியாக மிரட்டிய மணிவண்ணன்.. பரபரப்பில் பிக் பாஸ்!
Manivannan Vs Vinoth Babu: தமிழில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ். இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த மணி வண்ணன், வினோத் பாபுவுடன் சண்டையிடும் புரோமோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது கடந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் தொடங்கியது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்துவரும் நிலையில், மக்கள் மத்தியில் ஆரம்பத்திலிருந்தே கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது தொடங்கிய முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியானது தொடங்கிய 4வது நாளிலே பிளாக் பாண்டி சில உடல் நிலை பிரச்சனையின் காரணமாக வெளியேற்றப்பட்டார். இதை அடுத்ததாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக் பாஸ் காமன் மேன் போட்டியாளர் மணி வண்ணன் (Manivannan) இணைந்திருந்தார். இந்நிலையில் இவர் வந்த முதல் நாளிலே இவர் சக போட்டியாளர்களிடையே சண்டையில் ஈடுபட்டிருந்தார். இவரை அடுத்ததாக 2 வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக நடிகை ஆனந்தி கலந்துகொண்டிருந்தனர்.
இன்றுடன் (17/09/2026) பிக் பாஸ் சீசன் 10 தொடங்கி கிட்டத்தட்ட 11 நாட்களான நிலையில், இன்று வினோத் பாபு மற்றும் மணிவண்ணன் மத்தியில் டாஸ்கில் சண்டையாக மூண்டுள்ளது. இது தொடர்பான புரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க:கண்ணில் நீ வந்து கத பேச கனவில் உன்னால் சிரிச்சேனே… 11 ஆண்டுகளை நிறைவு செய்தது திரிஷா இல்லனா நயன்தாரா படம் – கொண்டாடும் ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன் 10ல் வினோத் பாபு மற்றும் மணிவண்ணன் இடையே சண்டை ஏற்பட்ட புரோமோ பதிவு:
Yaara enga Manivannan annan’ah ragging pannadhu.. 😱
Bigg Boss Tamil Season 10 streaming 24×7 only on #JioHotstar #BiggBossTamilSeason10 #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #VijaySethupathi #BiggBossTamil #BB10 #JioHotstarTamil pic.twitter.com/Sw7uBEqga3
— JioHotstar Tamil (@JioHotstartam) September 17, 2026
இந்த புரோமோவில், வினோத் பாபு, மணிவண்ணனிடையே பாத்ரூமில் வைத்து, அடுக்கடுக்காக டாஸ்க் கொடுத்துள்ளார். அதில் கோபமான மணிவண்ணன் வினோத் பாபுவிடம் அடுக்கடுக்கான கேள்வியை கேட்டு, சண்டையில் ஈடுபட்டுள்ளார். உடன் இருந்த குமரன் அவர்களின் சண்டையை தீர்த்துவைத்துள்ளார். மேலும் இதனால் நொந்துபோன வினோத் பாபு, தனியாக தனது பெட்டில் இருக்கும் புரோமோ வெளியாகியுள்ளது. இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது ஆரம்பத்திலிருந்தே பல்வேறு விமர்சனங்கள் இருவருகிறது.
இதையும் படிங்க: பிக் பாஸில் லட்சுமி பிரியா மற்றும் சாந்தினியுடன் மூடும் பகை – வைரலாகும் புரோமோ!
இந்த பிக் பேச சீசன் 10 நிகழ்ச்சியானது 24/7 நேரமும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியை 24 மணிநேரமும் ரசிகர்கள் பார்வையிட்டுவருகிறார்கள். இதனால் இந்த நிகழ்ச்சியின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.