பிக்பாஸ் தமிழில் கேப்டன் மீது அதிருப்தியில் இருக்கும் போட்டியாளர்கள் – வைரலாகும் தகவல்
Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இரண்டாவது வாரம் வீட்டின் லீடராக ஷமா தேர்வானார். அதனைத் தொடர்ந்து இன்று அவர் மீது அதிருப்தி இருப்பதாக ஆளும் அணியினரே கூறி எதிரனிக்கு சென்றது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் வீட்டின் தலைவரை ஒரு டாஸ்க் மூலம் தேர்வு செய்து அந்த வாரத்தில் நடக்கும் அனைத்து விசயங்களையும் பார்த்துகொள்ள வேண்டும். மேலும் அந்த வாரம் கேப்டனாக இருக்கும் நபரை வீட்டில் யாரும் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்யவும் முடியாது. இதனால் வீட்டின் கேப்டனாக தேர்வாகும் போட்டியாளர் அந்த வாரம் மற்றும் அடுத்த வாரம் என இரண்டு வாரமும் பிக்பாஸ் வீட்டில் இருக்க வாய்ப்பு கிடைக்கின்றது. இதன் காரணமாகவே பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் கேப்டனாக தேர்வாக வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருவது வழக்கம். மேலும் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொடங்கியதில் இருந்து தற்போது இது இரண்டாவது வாரம் நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் சாதிகா வீட்டின் லீடராக தேர்வான நிலையில் இரண்டாவது வாரம் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஷமா வீட்டின் தலைவியாக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து அடுத்தடுத்து இரண்டு வாரமுமே பெண் போட்டியாளர்கள் வீட்டின் தலைவராக தேர்வாகி உள்ளனர்.




பிக்பாஸில் கேப்டன் மீது அதிருப்தியில் இருக்கும் போட்டியாளர்கள்:
இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் ஆளும் அணி எதிரணி என இரண்டு அணிகளாக பிரிந்து வாரம் முழுவதும் செயல்படுகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் ஆளும் அணியில் ஷமாவின் ஆட்சியில் அதிருத்தி இருப்பதாக கூறி போட்டியாளர்கள் எதிரணிக்கு சென்றுவிடுகிறார்கள். மேலும் ஷமாவிற்கு ஆதரவாக மூன்றே போட்டியாளர்கள் மட்டுமே ஆளும் அணியில் இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிக்பாஸ் தமிழில் நேரடியாக மோதிக்கொள்ளும் ஷமா – ஜேசன்… வெளியானது கலேபர வீடியோ
பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day11 #Promo2 of #BiggBossTamil
Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision pic.twitter.com/MCvsbh6r3d
— Vijay Television (@vijaytelevision) September 17, 2026
Also Read… ராயன் படத்தில் நடிக்க இதுதான் காரணம்… நடிகர் சந்தீப் கிஷன் ஓபன் டாக்