AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

What To Watch: மை பால்ட் படம் போல ரொமாண்டிக் வெப் சீரிஸ் பார்க்க ஆசையா? அப்போ இந்த வெப் சீரிஸ் உங்களுக்கத்தான்!

Off Campus Web Series Review: ஓடிடியில் மக்கள் திரைப்படங்களை பார்ப்பதை விடவும் வெப் தொடர்களை அதிகம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் ரோமெண்டிக்காக மற்றும் தனியாக பார்க்கக்கூடிய வெப் சீரிஸ்களும் அதைக்கமாக இருக்கிறது. மை பால்ட் திரைப்படம் போலவே இருக்கும், இந்த வெப் சீரிஸை பார்த்திருக்கீங்களா?. அப்போ இதை முழுவதுமாக படிங்க.

What To Watch: மை பால்ட் படம் போல ரொமாண்டிக் வெப் சீரிஸ் பார்க்க ஆசையா? அப்போ இந்த வெப் சீரிஸ் உங்களுக்கத்தான்!
ஆஃப் கேம்பஸ் வெப் சீரிஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Sep 2026 19:13 PM IST

திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகும் படங்கள், தற்போது பல நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகிவருகிறது. திரைப்படங்களை விடவும் ஓடிடியில் வெப் சீரிஸ் (Web Seris) மற்றும் ஹாலிவுட் படங்கள் (Hollywood Movies)நேரடியாக வெளியாகிவருகின்றன. மக்களும் திரைப்படங்களை பார்ப்பதை விடவும் வெப் தொடர்களை அதிகமாக பார்த்து வருகின்றனர். அந்த வகையில் ஹாலிவுட், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் எடுக்கப்பட்ட வெப் தொடர்கள் தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ஓடிடியில் பார்க்க முடிகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் வெப் சீரிஸ்தான் ஆஃப் கேம்பஸ் (Off Campus). ஹாலிவுட் சினிமாவில் உருவாக்கப்பட்ட ரோமெண்டிக் வெப் தொடராகும். இந்த தொடரானது விளையாட்டு, நட்பு மற்றும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெப் தொடரானது பிரபல கன்னடியன் எழுத்தாளர் எல்லே கென்னெடி (Elle Kennedy) எழுதிய, ஆஃப் கேம்பஸ் புத்தக சீரிஸிலிருந்து (Off Campus Series) எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃப் கேம்பஸ் வெப் தொடரானது, “காரெட் கிரஹாம்” (Garrett Graham) மற்றும் “ஹன்னா வெல்ஸ்” (Hannah Wells) என்ற இரு கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் விமர்சனங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க: இணையத்தில் பேசுபொருளான A Mosquito in the Ear படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

ஆஃப் கேம்பஸ் வெப் தொடர் எப்படி இருக்கு :

இந்த ஆஃப் கேம்பஸ் வெப் தொடரானது, ஐஸ் ஹாக்கி விளையாட்டு கேப்டனாக இருக்கும் ஹீரோ (காரெட் கிரஹாம்), காதலின் மீது ஆர்வம் காட்டுவதில்லை. அதே போல கதாநாயகியான (ஹன்னா வெல்ஸ்) பிரபல பாடகர் ஒருவரின் மீது காதல் கொள்கிறாள். இதில் காரெட் கிரஹாம் தனது பள்ளி படிப்பில் பாடம் ஒன்றில் ஃபெயில் ஆகிறார். அதே படத்தில் கதாநாயகி ஹன்னா முதல் மதிப்பெண் எடுக்கிறார். இந்நிலையில் காரெட் கிரஹாம், ஹன்னா விடம் உதவி கேட்கிறார். மேலும் அதற்கு பதிலாக ஹன்னாவும், காரெட் கிரஹாமிடம், தான் காதலிக்கும் பாடகரை தன்னுடன் சேர்த்துவைக்கும்படி உதவி கேட்கிறார்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியாகி உள்ள மாதவனின் ஜிடிஎன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

இவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிவரும் நிலையில், இவர்கள் இருவருக்குள்ளும் காதல் எவ்வாறு வருகிறது. காதலிக்கவே கூடாது என நினைத்த ஹீரோ காரெட் கிரஹாம், ஹன்னா மீது எவ்வாறு காதலில் விழுகிறார் என ரோமெண்டிக் வெப் தொடராக இது அமைந்துள்ளது. 8 எபிசோடுகளுடன் இத்தொடர் இருக்கும் நிலையில், இந்தியாவில் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

ஆஃப் கேம்பஸ் வெப் தொடரின் ட்ரெய்லர் பதிவு:

ஆஃப் கேம்பஸ் வெப் தொடரை எந்த ஓடிடியில் பார்க்கலாம்:

இந்த ஆஃப் கேம்பஸ் வெப் தொடரானது, மொத்தத்தில் 8 தொடர்களாக உள்ளது. ஒவ்வொரு தொடர்களும் 45 நிமிடங்களுக்கு குறையாமல் இருக்கும். இந்த வெப் சீரிஸ் தற்போது அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என பான் இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், பிரெஞ் என கிட்டத்தட்ட 10-கும் மேர்புற மொழிகளில் கிடைக்கிறது. காதலர்களாகவும், தனியாகவும் பார்க்கும் ரோமெண்டிக் வெப் தொடராக ஆஃப் கேம்பஸ் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us