OTT Movie: மீண்டும் மீண்டும் டைம் லூப்பில் சிக்கும் ஹீரோ.. மலையாளத்தில் இப்படி ஒரு படமா.. இதை மிஸ் பண்ணிராதீங்க!
Sambhavam Adhyayam Onnu Movie Review : ஒட்டுமொத்த இந்தியாவையும் வியப்பில் ஆழ்த்தும் திரைதுறையாக மலையாளம் சினிமா இருந்து வருகிறது. அந்த சினிமாவிலிருந்து 2026ம் ஆண்டில் வெளியாகிய அமானுஷ்ய உளவியல் திரில்லர் கதைக்களம் கொண்ட இப்படத்தை பார்த்திருக்கீங்களா?. முழு விவரங்கள் இதோ.
சினிமாவில் திரைப்படங்கள் திரையரங்குகளை விடவும் ஓடிடி தளங்களில் வெளியாகி மக்களை சென்றடைவதே அதிகமாக இருக்கிறது. அதனால் சில படங்களை படக்குழு நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டுவருகிறது. மேலும் சினிமாவில் வித்தியாசமான கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சினிமாவாக மலையாளம் இருக்கிறது. வித்தியாச வித்தியாசமான கதைகளை, திரைப்படங்கள் மற்றும் மக்களை மாற்றியோசிக்கவைக்கும் படங்களை இந்த சினிமாவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்த திரில்லர் திரைப்படம்தான் சம்பவம்: அத்யாயம் ஒன்னு (Sambhavam: Adhyayam Onnu).
இயக்குநர் ஜித்து சதீசன் (Jithu Satheesan) இயக்கத்தில் வெளியாகியிருந்த இப்படம், அமானுஷ்ய உளவியல் திரில்லர் கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. திரையரங்குகளில் இப்படமானது வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், ஓடிடியிலும் மக்களின் கவனத்தை ஈர்த்துவருகிறது. இந்நிலையில் இப்படம் எப்படி இருக்கிறது?, எந்த ஓடிடியில் உள்ளது என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
இதையும் படிங்க: சினிமாவில் ஏழு முதலமைச்சர்களுடன் பணியாற்றிய ஒரே நடிகை.. அட எந்த நடிகை தெரியுமா?




சம்பவம் அத்யாயம் ஒன்னு திரைப்படம் எப்படி இருக்கு:
இந்த சம்பவம் அத்யாயம் ஒன்னு என்ற படமானது, தமிழகம் மற்றும் கேரளா பார்த்ததில் உள்ள ஒரு மர்மம் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த காட்டில் மாட்டிக்கொள்ளும் நபர்களை பற்றி தொடங்குகிறது. அங்கு மாற்றிக்கொண்டவர்கள் கிட்டத்தட்ட 35 வருடமாக ஒரே இடத்தில் சுற்றி சுற்றி, ஒரே சம்பவத்தை மீண்டும் மீண்டும் செய்து அதே இடத்தில் மாட்டிக்கொள்கின்றனர். இதில் கதாநாயகன் ஆனந்த் என்பவர், ஒரு போலீசை காப்பாற்றுவதற்காக அந்த மர்மமான காட்டிற்குள் தனது உடனிருந்த போலீசாருடன் செல்கிறார்.
இதையும் படிங்க: டார்க் காமெடி பாணியில் ஓடிடியில் வெளியான இந்த மோகினியாட்டம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
அந்த காட்டில் அதிக சத்தம் மற்றும் ரத்தம் கீழே சிந்தினாலோ, பயங்கர ஒலியுடன் அவர்கள் அந்த காட்டில் மாட்டிக்கொள்வார்கள். அவ்வாறு படத்தின் நாயாகின் ஆனந்த், அங்கு சிக்கிக்கொண்ட மற்ற நபர்களை எவ்வாறு மீட்டர்?, அந்த டைம் லூப்பில் இருந்து அனைவரும் தப்பித்தார்களா? அல்லது மீண்டும் அந்த டைம் லூப்பில் அவர்கள் சிக்கிக்கொண்டார்களா?, இந்த காட்டு மர்மமாக மாறுவதற்கு காரணம் என்ன? என்பது இப்படத்தின் கதையாக இருக்கிறது.
சம்பவம் அத்யாயம் ஒன்னு படத்தின் ட்ரெய்லர் குறித்த பதிவு:
சம்பவம் அத்யாயம் ஒன்னு படத்தை எந்த ஓடிடியில் பார்க்கலாம்:
இந்த சம்பவம் அத்யாயம் ஒன்னு படமானது மொத்தமாக 2 மணிநேரமும் 7 நிமிடங்களும் கொண்ட திரைப்படம். இது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுவருகிறது. வார இறுதியில் குடும்பத்துடன் ஓடிடியில் பார்ப்பதற்கு, இது ஒரு சிறந்த படமாகும். இப்படத்தின் பிளாஸ்பேக் காட்சியில்தான் பல சுவாரஸ்யங்கள் இருக்கிறது, மறக்காமல் பாருங்கள்.