AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: ரசிகர்கள் கொண்டாடும் கருப்பு பட கிளைமேக்ஸ்.. எனது உதவியாளர் சொன்ன ஐடியா! – சூர்யா பகிர்ந்த தகவல்!

Suriya About Karuppu Climax Secret: நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் கொண்டாடப்பட்டுவரும் திரைப்படம்தான் கருப்பு. இப்படமானது திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் வகையில் சமீபத்தில் வெற்றிவிழாக் சிம்பிளாக கொண்டாடப்பட்டது. அப்போது பேசிய சூர்யா, கருப்பு பட கிளைமேக்ஸ் ஐடியா குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.

Suriya: ரசிகர்கள் கொண்டாடும் கருப்பு பட கிளைமேக்ஸ்..  எனது உதவியாளர் சொன்ன ஐடியா! – சூர்யா பகிர்ந்த தகவல்!
கருப்பு கிளைமாக்ஸ் பற்றி சூர்யாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 24 May 2026 11:08 AM IST

தென்னிந்திய மக்கள் மத்தியில் மிகவும் நெருக்கமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 45 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் 45வது திரைப்படமாக, கடந்த 2026 மே 15ம் தேதியில் வெளியாகியிருந்த படம்தான் கருப்பு (Karuppu). இதை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியிருந்த நிலையில், ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். மிக பிரம்மாண்டமான பட்ஜெட்டில், மாஸ், ஆக்ஷன் மற்றும் தெய்வீகம் போன்ற கதைக்களத்தில் இப்படமானது வெளியாகியிருந்தது. இப்படத்தில் சூர்யா கிட்டத்தட்ட 3 தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் இதில் முக்கிய வேடத்தில் திரிஷா (Trisha), இந்திரன்ஸ், ஷிவதா, ஆர்.ஜே.பாலாஜி, அனகா மாய ரவி உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். அந்த வகையில் இப்படமானது கிட்டத்தட்ட ரூ207 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை செய்துவருகிறது.

இதன் காரணமாக அண்மையில், கருப்பு பட வெற்றிவிழா சிம்பிளாக சென்னையில் கொண்டாடப்பட்டிருந்தது. அந்த நிகச்சியின்போது பேசிய சூர்யா, கருப்பு படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்கான காரணம் மற்றும் அதன் ஐடியா சொன்ன உதவியாளர் குறித்து கலகலப்பாக பேசியிருந்தார்.

இதையும் படிங்க: கருப்பு படத்தில் துரை சிங்கம் என்ட்ரி.. ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி!

கருப்பு திரைப்படத்தின் கிளைமேக்ஸ் ஐடியா குறித்து சூர்யா பகிர்ந்த தகவல்:

அந்த நிகழ்ச்சியின்போது சூர்யா பேசுகையில், “படத்தை தாண்டி கருப்பசாமிக்கான ஒரு பாடலை கொடுக்கவேண்டும் என்பது அது என்னுடைய அசிஸ்டன் குமாருடைய ஐடியா. படத்திற்கு சம்மந்தமே இல்லாத எனது உதவியாளர் குமார் சொன்ன ஐடியா இப்போது கொண்டாடப்படுகிறது. படத்தை எடுத்துமுடித்துவிட்டோம், பிறகு அது சரிப்படுவரவில்லை என்ற காரணத்தால், 5 மாதங்களுக்கு பின் எடுக்கப்பட்டதுதான் அந்த கிளைமேக்ஸ் பாட்டு.

இதையும் படிங்க: புதிய சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வரும் துருவ நட்சத்திரம் படம்

நீங்கள் திரையரங்குகளில் பார்த்துக்கொண்டு அந்த கருப்பு பாட்டு. நீங்கள் கிளைமேக்ஸ் பார்த்தது, நாங்கள் படத்தை முடித்துவிட்டு ஒரு 5 மாதங்களுக்கு பிறகு எடுத்தது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியின் ஷூட்டிங்கின்போது வேடம் என சொல்லிருக்கலாம் தயாரிப்பாளர், ஆனால் அவர் சினிமாவிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்” என அதில் அவர் வெளிப்படையாக கூறியிருந்தார்.

கருப்பு திரைப்படத்தின் கிளைமேக்ஸ் குறித்து நடிகர் சூர்யா பேசியிருந்த வீடியோ:

கருப்பு படமானது தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் வார இறுதியான நிலையில், அனைத்து திரையரங்குகளிலும் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்துவருகிறது. விரைவில் இப்படமானது சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூலித்து சூர்யாவிற்கு பிரம்மாண்ட வெற்றி திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us