Karuppu: கருப்பு படத்தில் துரை சிங்கம் என்ட்ரி.. ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி!
Suriya Durai Singam Look In Karuppu: நடிகர் சூர்யா மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் கூட்டணியில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருந்த திரைப்படம்தான் கருப்பு. இப்படமானது திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டவரும் நிலையில், இப்படத்தில் சிங்கம் பட துரைசிங்கம் கெட்டப்பில் சூர்யா நடித்திருந்த கதாபாத்திர ஷூட்டிங் வீடியோவை ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் ஒரு பிரம்மாண்டமான நாயகனாக இருந்துவருபவர் சூர்யா (Suriya). இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக வெளியான படங்கள் தொடர்ந்து பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. அதிலும் கடந்த 2024ம் ஆண்டில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான கங்குவா (Kanguva) படமானது தோல்வியை சந்தித்திருந்தது. இதையடுத்து இந்த 2026ம் ஆண்டில் சூர்யாவிற்கு சினிமாவில் மாஸ் ஹீரோவாக ரீஎன்ட்ரி கொடுத்த திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்கியிருந்த நிலையில், சூர்யா, திரிஷா, இந்திரன்ஸ், ஷிவதா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு மே 15ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. அந்த வகையில், இதுவரை உலகளவில் சுமார் ரூ 220 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது என கூறப்படுகிறது.
இப்படத்தில் சூர்யா கிட்டத்தட்ட 3 கெட்டப்பில் நடித்துள்ளார். அதிலும் சிங்கம் (Singam) படத்தின் துரைசிங்கம் கெட்டப்பில் சூர்யா இருந்த காட்சிகளெல்லாம் திரையரங்குகளில் தெறிக்கவிட்டது. அந்த காட்சியின் ஷூட்டிங்கின்போது எடுத்த வீடியோவை ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் இல்லை.. அப்போ எப்போது தெரியுமா?
துரைசிங்கம் கெட்டப்பில் சூர்யாவின் கருப்பு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட வீடியோ:
Singam @Suriya_offl sir is roaring at the box office 🔥🔥🔥
My favourite @anbariv masters on special duty for #Karuppu 💥💥💥 pic.twitter.com/13ADu3bgTB— RJ Balaji (@RJ_Balaji) May 23, 2026
கருப்பு படத்தில் சூர்யா வழக்கறிஞர், கருப்பசாமி மற்றும் துரைசிங்கம் என மூன்று வேடங்களில் நடித்திருந்தார். இப்படமானது சூர்யாவிற்கு இப்படமானது ஒரு பிரம்மாண்ட படமாக அமைந்தது. இப்படமானது 2026ம் ஆண்டு மே14ம் தேதியில் வெளியாகுவதாக இருந்த நிலையில், பின் தயாரிப்பாளர் நிதி நெருக்கடியின் காரணமாக ஒரு நாள் தாமதமாகி பின் 2026 மே 15ம் தேதியில் காலை 9 மணியளவில் ஒளிபரபாககியிருந்தது. இப்படமானது மக்கள் மத்தியில் சரியாக வரவேற்பை பெறாத என நினைக்கப்பட்டிருந்தது. ஆனால் சூர்யாவிற்கு இப்படமானது எதிர்பாராத வரவேற்பை கொடுத்திருந்தது.
இதையும் படிங்க: பிரதீப் ரங்கநாதன் தயாரிக்கும் படத்தில் நாயகனாகும் இயக்குநர்? வைரலாகும் தகவல்
சூர்யாவின் வாழ்க்கையிலே தமிழகத்தில் மட்டும் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்த படமே இல்லை. ஆனால் இந்த கருப்பு படமானது வெறும் 8 நாட்களில், ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இன்னும் இப்படமானது ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூலிக்கும் என .எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கருப்பு பட கிளைமேக்சில் சூர்யா துரைசிங்கம் கெட்டப்பில் இருந்த படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ளார்.