AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jailer 2: ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் இல்லை.. அப்போ எப்போது தெரியுமா?

Jailer 2 Movie Release Date: கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் 2026ம் ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் திரைப்படம் ஜெயிலர் 2. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என கூறப்பட்டது. அந்த வகையில், தற்போது இப்படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Jailer 2: ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் இல்லை.. அப்போ எப்போது தெரியுமா?
ஜெயிலர் 2Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 May 2026 17:05 PM IST

தென்னிந்திய மக்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவரின் நடிப்பில் இறுதியாக கூலி (Coolie) படமானது வெளியாகியிருந்தது. லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில், கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகி கிட்டத்தட்ட ரூ 400 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. இப்படத்தின் வெற்றியை அடுத்ததாக இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் இவர் நடித்துவந்த திரைப்படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இப்படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சிறப்பாக தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஷூட்டிங் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் சமீபத்தில் இதன் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது.

இந்நிலையில் இப்படமானது வரும் 2026 ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுவந்த நிலையில், இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் வெளியீட்டில் தாமதம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த படக்குழு

ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் :

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் மீது ரசிகர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்துடன், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல்வேறு மொழிகளில் உள்ள நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். ஆக மொத்தத்தில் ஒரு பான் இந்திய பிரம்மாண்ட படமாக இந்த ஜெயிலர் 2 படம் தயாராகியுள்ளது.

இதையும் படிங்க: ஒரு முழுமையான மாஸ் கமர்ஷியல் பிளாக்பஸ்ட்.. கருப்பு படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!

இப்படத்தை ஆக்ஷன் 14ம் தேதியில் வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், தற்போது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி அல்லது 11ம் தேதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் நிறைவு குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

ஜெயிலர் 2 படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026ம் ஆண்டு மே இறுதியில் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதன்படி விரைவில் இதுபற்றிய தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us