ஜெயிலர் 2 படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார் ரஜினிகாந்த் – ரிலீஸ் எப்போது தெரியுமா?
Rajinikanth Starts Jailer 2 Movie Dubbing Work: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டு முதலாவதாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வெளியான முதல் பாகம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியகாவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் இரண்டாம் பாகத்திற்கான லீட் வைத்தே உருவாகி இருந்தது. மேலும் பாகுபலியில் கட்டப்பா ஏன் பாகுலியை குத்தினார் என்பது போத இந்த ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் அவரது மகனை சுட்டாரா இல்லையா என்பதை மையமாக வைத்தே படம் முடிவடைந்தது. இதன் காரணமாகவே ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகின்றது.
இந்த நிலையில் இந்த ஜெயிலர் 2 படத்தில் முதல் பாகத்தில் நடித்த பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




ஜெயிலர் 2 படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கினார் ரஜினிகாந்த்:
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் ஒன்று வைரலாகி வருகின்றது. அதன்படி இந்த ஜெயிலர் 2 படத்தின் டப்பிங் பணிகள் ரஜினிகாந்த் தொடங்கியுள்ளார். மேலும் படம் வருகின்ற 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இறுதியாக நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் கூலி படமும் கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#SuperstarRajinikanth has started dubbing for #Jailer2, planning for an August 2026 theatrical release worldwide. pic.twitter.com/gwNbGBx4Th
— Movies Singapore (@MoviesSingapore) April 29, 2026
Also Read… டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட நடிகர் யாஷ்