AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhanush: எனக்கு ஒரு கதை சொல்லிவிட்டு காணாமல் போய்விட்டீர்கள்.. வெங்கி அட்லூரி பற்றி பேசிய தனுஷ்!

Dhanush and Venky Atluri Alliance: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், இயக்குநராகவும் இருந்துவருபவர் தனுஷ். சமீபத்தில் இவர் கர திரைப்படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் வெங்கி அட்லூரியும் கலந்துகொண்டிருந்த நிலையில், அவருடனான புது படம் குறித்தும் தனுஷ் பேசியுள்ளார்.

Dhanush: எனக்கு ஒரு கதை சொல்லிவிட்டு காணாமல் போய்விட்டீர்கள்.. வெங்கி அட்லூரி பற்றி பேசிய தனுஷ்!
தனுஷ் மற்றும் வெங்கீ அட்லூரிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Apr 2026 09:21 AM IST

நடிகர் தனுஷ் (Dhanush), தமிழ் மொழியில் மட்டுமில்லாமல், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளிலும் படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் 2026ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாக தயாராகியுள்ள படம்தான் கர (Kara). இந்த படமானது அதிரடி கிராமத்து ஆக்ஷன் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜூ (Mamitha baiju) நடித்துள்ளார். இந்த கர படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh raja) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளானது தீவிரமாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் கோவையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நடைபெற்றிருந்தது.

அதையடுத்தாக நேற்று 2026 ஏப்ரல் 26ம் தேதியில், ஹைதராபாத்தில் பிரம்மாண்டமான நடைபெற்றிருந்தது. அதில் இயக்குநர்கள் வெங்கி அட்லூரி (Venky Atluri) மற்றும் புச்சி பாபு சனா (Buchi Babu sana) போன்ற பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டிருந்தனர். அப்போது மேடையில் பேசிய தனுஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி புதிய படத்தின் கதை கூறியது பற்றி பேசியிருந்தார்.

இதையும் படிங்க: அகண்டா பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி? வைரலாகும் தகவல்

வெங்கி அட்லூரி குறித்து மேடையில் கலகலப்பாக பேசிய தனுஷ்:

அந்த நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், “எனக்காக ஒரு கதையை சொல்லிவிட்டு காணாமல் போய்விட்டர்கள். விரைவில் அந்த கதையை திரும்பக் கொண்டு வாருங்கள். அதே கதையை கொண்டுவாருங்கள். நான் காத்திருக்கிறேன். உங்களுக்கு நிறைய திறமைகள் இருக்கிறது. உங்களின் முன்னேற்றத்தை கண்டான் நான் மகிழ்ச்சியடைகிறேன். லக்கி பாஸ்கர் படத்தின் வெற்றி, மேலும் உங்களின் புதிய படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என தனுஷ் அதில் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: உங்கள் திறமையில் 10 சதவீதம் எனக்கு வேண்டும் – இயக்குநர் வெங்கி அட்லூரி

வெங்கி அட்லூரி குறித்து தனுஷ் பேசியது தொடர்பான பதிவு:

தனுஷ் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரியின் கூட்டணியில் ஏற்கனவே வாத்தி என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாக வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருது ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு கிடைத்திருந்தது.

அந்த வகையில் இந்த கூட்டணியானது விரைவில் மீண்டும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் வெங்கி அட்லூரி, சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெறும் நிலையில், 2026 ஜூலை மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Follow Us