அகண்டா பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி? வைரலாகும் தகவல்
Actor Karthi Next Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் படங்கள் உருவாகி வருகின்றது. இந்த நிலையில் அடுத்தாக உருவாக் உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்தடுத்துப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் வா வாத்தியார். ஃபேண்டசி காமெடி பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியிலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து சர்தார் 2 மற்றும் மார்ஷல் என இரண்டு படங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.
இதில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் முதலாவதாக சர்தார் 2 படமும் அடுத்ததாக மார்ஷல் படமும் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி எந்த இயக்குநரின் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் அவர் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.




அகண்டா பட இயக்குநருடன் இணையும் நடிகர் கார்த்தி?
அதன்படி தெலுங்கு சினிமாவில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படங்கள் அகண்டா பாகம் 1 மற்றும் 2. இந்தப் படங்களை எழுதி இயக்கிய இயக்குநர் போயபதி சீனு தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் வெளியாகும் படங்கள் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குநராக உள்ள போயபதி சீனு தற்போது நடிகர் கார்த்திக்கு கதை கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இவர்கள் இருவரின் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகின்றது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
As per Telugu media, #Karthi is in discussion with Akhanda Director. #BoyapatiSrinu for a film🎬 pic.twitter.com/GpuI8Qqi6H
— AmuthaBharathi (@CinemaWithAB) April 26, 2026
Also Read… கதை சொல்வதற்கு மொழித்தடை இல்லை – வாரணாசி படம் குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலி பேச்சு!