AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Irandu Vaanam: வெள்ளிச்சுடரே… விஷ்ணு விஷால் – மமிதாவின் இரண்டு வானம் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Vellichudare Song: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் புதிதாக தயாராகிவந்த படம்தான் இரண்டு வானம். இதை ராட்சசன் பட இயக்குநர் ராம் குமார் இயக்க, மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். அந்த வகையில் இப்படத்தின் முதல் பாடலான வெள்ளிச்சுடரே என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Irandu Vaanam: வெள்ளிச்சுடரே… விஷ்ணு விஷால் – மமிதாவின் இரண்டு வானம் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
வெள்ளிச்சுடரே பாடல்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 Apr 2026 19:34 PM IST

நடிகர் விஷ்ணு விஷாலின் (Vishnu Vishal) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் தயாரிப்பாளராகவும் திரைப்படங்களை தயாரித்துவருகிறார். இந்த வரிசையில் இவர் ராட்சசன் (Ratsasan) பட இயக்குநர் ராம் குமாரின் (Ram Kumar) இயக்கத்தில், புதிதாக நடித்துவந்த திரைப்படம்தான் இரண்டு வானம் (Irandu Vaanam). இதில் விஷ்ணு விஷால் லீட் நாயகனாக நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர் தமிழில் ரெபெல் என்ற படத்தின் மூலம் நாயகியாக நுழைந்தக நிலையில், இவர் இரண்டாவது ஒப்பந்தமான தமிழ் படம்தான் இரண்டு வானம். இப்படமானது வித்தியாசமான காதல் மற்றும் எமோஷனல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது.

இப்படத்தை மதராஸி திரைப்படத்தை தயாரித்திருந்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலை, பாடலாசிரியர் மதராஷே வரிகளில், பாடகர் கபில் கபிலன் பாடியுள்ளார். “வெள்ளிச்சுடரே” (Vellichudare ) என்ற லிரிக்கல் பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: அந்த படத்திற்காக முதலில் சாய் பல்லவியைதான் அணுகினேன் – இயக்குநர் ரத்னகுமார்!

இரண்டு வானம் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இரண்டு வானம் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது:

இந்த இரண்டு வானம் திரைப்படமானது ஒரு மலை கிராமத்தில் நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஆர்டிஸ்டாக நடித்துள்ள நிலையில், மமிதா பைஜூ வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். இப்படமானது காதல், எமோஷனல் மற்றும் சுவாரசியமான கதைக்களத்தில் அமைந்திருக்கும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது.

இதையும் படிங்க: கதை சொல்வதற்கு மொழித்தடை இல்லை – வாரணாசி படம் குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலி பேச்சு!

இப்படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்றுவந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்திருந்தது. அதை தொடர்ந்து இப்படத்தின் பின்னணி வேலைகள் சிறப்பாக நடைபெற்றுவந்தது. இந்நிலையில் சமீபத்தில் இப்படக்குழு, இப்படத்தை 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடுவதாக அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டிருந்தது. அதன்படி, வரும் 2026 ஆண்டு மே இறுதி அல்லது ஜூன் மாதத்தில் இப்படமானது வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Follow Us