AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rathna Kumar: அந்த படத்திற்காக முதலில் சாய் பல்லவியைதான் அணுகினேன் – இயக்குநர் ரத்னகுமார்!

Rathna Kumar About Sai Pallavi: பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரத்னகுமார். இவர் தொடர்ந்து படங்களை இயக்கிவரும் நிலையில், தற்போது 29 தி பிலிம் என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்த வரிசையில் இவர் மேயாத மான் என்ற படத்தை இயக்கியிருந்த நிலையில், அதில் சாய் பல்லவி நடிக்க மறுத்த விஷயம் குறித்து பகிர்ந்துள்ளார்.

Rathna Kumar: அந்த படத்திற்காக முதலில் சாய் பல்லவியைதான் அணுகினேன் – இயக்குநர் ரத்னகுமார்!
இயக்குனர் ரத்ன குமார் மற்றும் சாய் பல்லவிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 25 Apr 2026 16:17 PM IST

கடந்த 2017ம் ஆண்டில் வெளியான “மேயாத மான்” (Meyaadha Maan) என்ற படத்தை இயக்கி, தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் ரத்னகுமார் (Rathna Kumar). இவர் இதற்கு முன்னே பல படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் தற்போது லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கும், திரைப்படங்களில் துணை இயக்குநராக இருந்த்துவருகிறார். இவரின் இயக்கத்தில் இதுவரை குறைவான படங்கள் வெளியாகியிருந்தாலும், ஒவ்வொன்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இவரின் இயக்கத்தில் குளு குளு, ஆடை போன்ற படங்களை இயக்கியிருந்தார். இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களில் இணை எழுத்தாளராகவும், வசனங்களையும் எழுதியிருந்தார். அந்த வகையில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு இவரின் இயக்கத்தில் தயாராகியுள்ள படம்தான் 29 தி பிலிம். இப்படமானது வரும் 2026 மே 8ம் தேதியில் வெளியாகவுள்ளது.

அந்த வகையில் புரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் ரத்னகுமார். தனது மேயாத மான் படத்தில் முதலில், பிரியா பவானி ஷங்கருக்கு பதிலாக சாய் பல்லவியைதான் (Sai Pallavi) நடிக்க வைக்க விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சூரியின் மண்டாடி படத்தின் ஷூட்டிங் நிறைவு.. படப்பிடிப்பு வீடியோவை பகிர்ந்த படக்குழு!

மேயாத மான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் சாய் பல்லவி என இயக்குநர் ரத்னகுமார் பேச்சு:

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் ரத்னகுமார், மேயாத மான் படத்தில் பிரியா பவானி ஷங்கரை தேர்வு செய்வதற்கு முன்பு, கதாநாயகியாக சாய் பல்லவியைதான் அந்த வேடத்தில் நடிக்க வைக்க அணுகியதாக கூறியுள்ளார். அவருக்கு இப்படத்தின் கதை பிடித்திருந்தாலும், இறுதியில் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அந்த மேயாத மான் படத்தின் கதையில், திருமணத்திற்கு முன்பே நாயகன் மற்றும் நாயகி இருவரும் நெருக்கமான காட்சிகளில் இருக்கும் சீன் அமைந்திருந்ததால், அதில் சாய் பல்லவி நடிக்க மறுத்ததாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கருப்பு ஆடியோ லாஞ்ச்… புது போஸ்டரை வெளியிட்ட படக்குழு

மேலும் இதை போலவேதான், மணி ரத்னத்தின் காற்றுவெளியீட்டை படத்திலும், திருமணத்திற்கு முன்னே நெருக்கமான காட்சிகளில் நடிக்கும் சீன் அமைந்ததால், அதிலும் சாய் பல்லவி நடிக்க மறுத்ததாக வட்டாரங்கள் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

29 தி பிலிம் திரைப்படம் குறித்து இயக்குநர் ரத்னகுமார் வெளியிட்ட பதிவு:

இந்த 29 படத்தில் ரெட்ரோ பட வில்லன் விது நாயகனாக நடிக்க, நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நாயகியாக நடித்துள்ளார். இப்படமானது ஒரு ஆணின் காதல், வேலையின்மை போன்றவற்றை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளதாம். இப்படமானது வரும் 2026 மே 8ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிவருகிறது.

Follow Us