AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜின் AA23 படம் எப்படி இருக்கும்? ஷூட்டிங் எப்போது தெரியுமா- இயக்குநர் ரத்னகுமார் அப்டேட்!

AA23 Movie update: தமிழில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ரத்னகுமார். இவரின் இயக்கத்தில் 29 தி பிலிம் என்ற படமானது தயாராகியுள்ளது. அந்த வகையில் இவர் அல்லு அர்ஜுனின் AA23 படத்தில் இணை இயக்குநராக பாணியாற்றவுள்ள நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜின் AA23 படம் எப்படி இருக்கும்? ஷூட்டிங் எப்போது தெரியுமா- இயக்குநர் ரத்னகுமார் அப்டேட்!
ரத்னா குமார், லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன்Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Updated On: 23 Apr 2026 21:10 PM IST

இயக்குநர் ரத்னகுமார் (Rathna Kumar) தமிழ் சினிமாவில் மேயாத மான் (Meyaadha Maan) என்ற படத்தை இயக்கி பிரபலமானார். இந்த படமானது இவருக்கு மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் ஆடை, குளு குளு போன்ற படங்ககளை இயக்கியிருந்தார். இந்த படங்கள் இயக்கும்போதிலிருந்தே, லோகேஷ் கனகராஜுடன் படங்களில் பணியாற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதுவரை லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் வெளியான மாஸ்டர், லியோ, கூலி, விக்ரம், கைதி என பல படங்களில், இயக்குநர் ரத்னகுமாரும் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் இவர் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிதாக படத்தை இயக்கியுள்ளார்.

அந்த படம்தான் 29 தி பிலிம் (29 The Film). இப்படமானது வரும் 2026 மே 8ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த ரத்னகுமார், அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் AA23 படம் குறித்து சிறப்பான அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தமிழக தேர்தல்.. ஜன நாயகக் கடமையாக ஆற்றிய தமிழ் பிரபலன்கள்.. யார் யாருனு பாருங்க!

அல்லு அர்ஜுனின் AA23 திரைப்படம் குறித்து அப்டேட் கொடுத்த இயக்குநர் ரத்னகுமார்:

அதில் இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில், “இந்த AA23 படத்தை ஒரு பான் இந்திய படமாக என்று, நான் நம்புவதற்கு காரணம், இதில் நடித்துள்ள நடிகர்கள், மைய கதாபாத்திரம் அல்லது கதைக்களம் இல்லை. மாறாக இதன் கதை ஒரு உலகளாவிய, சர்வதேசம் ஈர்ப்பை கொண்டிருப்பதுதான். அல்லு அர்ஜுன் சார் இப்படத்தில் இருக்கும்போது, நங்கள் கற்பனை செய்தபடி கதாபாத்திரங்களை வடிவமைக்கும் சுதந்திரம் எங்களுக்கு கிடைத்தது.

இதையும் படிங்க: No Need என்று சொன்னாரா அஜித்? என்ன நடந்தது – முழு விவரம் இதோ!

அவருடன் இப்படத்தை பற்றிப்பேசும்போது உற்சாகமாக இருந்தது. தற்போது இதன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் இப்படத்திற்காக மூன்றுவாராம் கலந்துரையாடலில் ஈடுபட்டோம். இதன் ஷூட்டிங் 2026 மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது” என கூறினார்.

அல்லு அர்ஜுனின் AA23 படம் குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பதிவு:

AA23 படமானது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஒரு பான் இந்திய படமாக தயாராகவுள்ளதாம். இதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரிக்கவுள்ளது. அந்த வகையில் இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையில், விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.

Follow Us