AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

No Need என்று சொன்னாரா அஜித்? என்ன நடந்தது – முழு விவரம் இதோ!

Ajith Kumar Manager Explains No Need Controversy : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் காலையிலேயே நடிகர் அஜித் குமார் வந்து வாக்கு செலுத்திவிட்டு சென்ற பிறகு அவர் பேசியதாக சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

No Need என்று சொன்னாரா அஜித்? என்ன நடந்தது – முழு விவரம் இதோ!
அஜித் குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Apr 2026 12:49 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருப்பவர்கள் இன்று சட்டமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் காலையிலேயே முதல் ஆளாக தனது ஜன நாயகக் கடமையை ஆற்ற வந்தார் நடிகர் அஜித் குமார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் இவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி கார் ரேஸிங்கிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெல்ஜியம் நாட்டில் நடைப்பெற்ற போட்டியில் கலந்துகொண்டு இந்தியா சார்பில் 2-வது பரிசைப் வென்றது அஜித் குமாரின் கார் ரேஸ் குழு. இந்த வெற்றியைக் கொண்டாடிய உடனே சென்னைக்கு நேற்று விமானம் மூலம் திரும்பினார் நடிகர் அஜித் குமார். தொடர்ந்து இன்று காலையிலேயே தனது ஜன நாயகக் கடமையை ஆற்றினார்.

அதன்படி சென்னையில் உள்ள திருவான்மியூர் சட்டமன்ற தொகுதியில் காலை 7 மணிக்கு முன்பாகவே வந்தார் நடிகர் அஜித் குமார். வெள்ளை நிற கோட் சூட் மற்றும் கருப்பு கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக வாக்களிக்க வந்த நடிகர் அஜித் குமாரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். புன்னகையுடன் வாக்கை செலுத்திவிட்டு வந்த நடிகர் அஜித் குமார் ஹார்ட் சிம்பிளை ரசிகர்களுக்கு காட்டிவிட்டு சென்றார். மேலும் செய்தியாளர்கள் அவரிடம் பேச முயன்ற போது அவர் எதுவும் பேசவில்லை.

No Need சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் அஜித்தின் மேனேஜர்:

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் வாக்களித்துவிட்டு சென்ற பிறகு அவரிடம் செய்தியாளர்கள் ஆட்சியில் மாற்றம் தேவையா என்று கேட்டதற்கு நோ நீட் என்று அவர் சொன்னதாக செய்திகள் பரவியது. இந்த செய்தி தீயாப் பரவிய சிறிது நேரத்திலேயே அஜித் குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அந்த மாதிரி அஜித் சொல்லவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் செய்தியாளர்களின் பேட்டிக்கு அவர் நோ நீட் என்று கூறியதகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இயக்குநர் வெங்கி அட்லூரி கதை சொல்லும் போது இதனை மிஸ் செய்ய கூடாது என்று நினைத்தேன் – மமிதா பைஜூ

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தலைவர் 173 படம் எந்த நிலைமையில் உள்ளது? வைரலாகும் தகவல்

Follow Us