கோவையில் வறட்சியால் பொலிவிழந்த ஆடிப் பெருக்கு.. ஆற்றில் நீரின்றியும் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபட்ட பக்தர்கள்!!
Perur Padithurai Aadi Perukku: கோவையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பேரூர் படித்துறையில் பருவமழை பொய்த்ததன் காரணமாக ஆற்றில் நீர்வரத்து இன்றி ஆடிப் பெருக்கு விழா பொலிவிழந்து காணப்பட்டது. இருப்பினும், பாரம்பரிய ஐதீகத்தை மாறாமல் பின்பற்றிப் பக்தர்கள் குழாய் நீர் மூலம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளித்து வழிபட்டனர்.
கோவை, ஆக.03: ஆடி மாதம் 18-ஆம் நாளன்று தமிழகம் முழுவதும் காவிரி மற்றும் அதன் துணை நதிக்கரைகளில் ஆடிப் பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவையின் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் அருகிலுள்ள படித்துறையில், ஆடிப் பெருக்கையொட்டி பக்தர்கள் திரண்டு தங்களது மறைந்த முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபாடுகளை மேற்கொண்டனர்.
Follow Us
