திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகன்களுடன் நடிகர் தனுஷ் சிறப்பு தரிசனம்!
Actor Dhanush Visits Thiruvannamalai: 'ஓம்' திரைப்படப் படப்பிடிப்பிற்காகத் திருவண்ணாமலை வந்துள்ள பிரபல நடிகர் தனுஷ், இன்று அதிகாலை தனது இரண்டு மகன்களுடன் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகை தந்து கோபூஜை மற்றும் சிறப்பு யாக பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை, ஆகஸ்ட் 03: பிரபல தமிழ்த்த்திரைப்பட நடிகர் தனுஷ், ஆன்மீகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் (அண்ணாமலையார்) திருக்கோயிலுக்கு இன்று அதிகாலை தனது மகன்களுடன் வருகை தந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை மனமுருகி வழிபாடு செய்தார். கோயில் வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்ற அவரை, ஆன்மீக பக்தர்களும் திருக்கோயில் ஊழியர்களும் ஆர்வத்துடன் சந்தித்துச் செல்ஃபி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
Follow Us
