பல ஆண்டுகளாக உள்ளூர் செய்தி சேகரிப்பில் அனுபவம் பெற்றவர். அரசியல், சமூக பிரச்சினைகள், மக்கள் நலன், குற்றச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் தரமான முறையில் வழங்குவதில் திறமை பெற்றுள்ளார். மாவட்ட செய்திகளை வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்கும் திறன் கொண்டவர். டிஜிட்டல் மற்றும் வீடியோ செய்தி தயாரிப்பிலும் அனுபவம் பெற்றுள்ளார். துல்லியமான மற்றும் விரைவான செய்தி வழங்கலில் கவனம் செலுத்துகிறார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகன்களுடன் நடிகர் தனுஷ் சிறப்பு தரிசனம்!
Actor Dhanush Visits Thiruvannamalai: 'ஓம்' திரைப்படப் படப்பிடிப்பிற்காகத் திருவண்ணாமலை வந்துள்ள பிரபல நடிகர் தனுஷ், இன்று அதிகாலை தனது இரண்டு மகன்களுடன் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வருகை தந்து கோபூஜை மற்றும் சிறப்பு யாக பூஜைகளில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
- Vinoth V
- Updated on: Aug 3, 2026
- 2:09 pm IST
கோயிலுக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த சைக்கிளை நைசாக திருடிய நபர்.. வெளியான சிசிடிவி காட்சி!
திருவிடைமருதூர், குமரன் கோவில் வாசல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த செல்வம் என்பவரது சைக்கிளை மர்ம நபர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. செல்வம், தனது சைக்கிளை நிறுத்திவிட்டு கோயிலுக்குள் சென்று விட்டு சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது தனது சைக்கிள் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்ததுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Vinoth V
- Updated on: Jul 31, 2026
- 4:51 pm IST
பைக் ரேஸால் வந்த வினை.. டிராக்டரில் மோதி தலை நசுங்கி வாலிபர் உயிரிழப்பு.. பகீர் சிசிடிவி காட்சிகள்!!
திருப்பத்தூர் அருகே நண்பர்களுடன் ரேஸில் ஈடுபட்ட வாலிபர், கட்டுப்பாட்டை இழந்து டிராக்டர் டிரெய்லரில் மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொடூர விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Vinoth V
- Updated on: Jul 31, 2026
- 2:06 pm IST
ரயிலில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபர் – உயிரை பணயம் வைத்து காப்பாற்றி கேட் கீப்பர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசூர் ரயில்வே டிராக்கில் பணியில் இருந்த கேட் கீப்பர் சந்தீப் சகர், மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரத்திற்கு நேற்று மாலை 3 45 மணிக்கு புறப்பட்டு சென்ற ரயில் அரசூர் பகுதியை அடைந்தபோது அந்த ரயிலில் ஒருவர் குறுக்கே பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள தயாராவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ரயில் அருகில் நெருங்கி விட்ட போதிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அதி வேகமாக ஓடி தண்டவாளத்தை கடந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை காப்பாற்றினார். இந்த சிசிடிவி வீடியோ பதிவு தற்போது வெளியாகி சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- Vinoth V
- Updated on: Jul 7, 2026
- 4:06 pm IST
“என் மகளை மீட்டுத் தாங்க!”.. நடுரோட்டில் உருண்டு பிரண்டு கதறிய பெற்றோர்.. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடி!!
இச்சம்பவம் குறித்து திவ்யதர்ஷினியின் தந்தையான காளி செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்கக் கூறுகையில், "என் மகளை ஏமாற்றித் திருமணம் செய்துள்ள பெருமாளுக்கு ஏற்கனவே பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இரண்டு தினங்களுக்கு முன்பு கூட அவன் மற்றொரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்றதை நானே நேரில் பார்த்தேன் என்றார்.
- Vinoth V
- Updated on: Jul 7, 2026
- 2:24 pm IST
விழுப்புரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் தேரோட்டம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
விழுப்புரம் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. மிகவும் சிறப்பாக நடைபெற்ற தேரோட்டத்தில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். இதனால் அந்த கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- Vinoth V
- Updated on: Jul 6, 2026
- 8:18 pm IST
பெற்றோர் திட்டியதால் கோபித்து கொண்டு ஓட்டம்.. சென்னையில் மாயமான சிறுவர்களை தேடும் காவல்துறை!
Chennai Crime : சென்னையில் வீட்டு வேலைகளை பார்க்காத சிறுவர்களை பெற்றோர் திட்டிய காரணத்தால் அவர்கள் வீட்டை விட்டு காணாமல் போய் உள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மாங்காடு போலீசார் வழக்குப் பதிந்து சிறுவர்களை தேடி வருகின்றனர் .
- Vinoth V
- Updated on: Jul 6, 2026
- 3:49 pm IST
பெற்ற மகனை பலி வாங்கிய கள்ளக்காதல்.. மயிலாடுதுறையில் அரங்கேறிய கொடூர கொலை.. தாய்- கள்ளக்காதலன் கைது!
Mayiladuthurai Crime: மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தையை கீழே தள்ளி கொலை செய்து விட்டு தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகம் ஆடிய பெற்ற தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை செம்பனார்கோவில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- Vinoth V
- Updated on: Jul 6, 2026
- 3:51 pm IST
தகறாறு செய்த போதை ஆசாமி – தட்டிக்கேட்ட இளைஞர்கள் மீது கொடூர தாக்குதல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆர்ப்பாக்கம் பகுதியில் தகராறு செய்த போத ஆசாமியை அப்பகுதி இளைஞர்கள் சிலர் தட்டி கேட்டுள்ளனர். இதனையடுத்து அந்த போதை ஆசாமி தனது நண்பர்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கியுள்ளார். காயமடைந்த இளைஞரை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துவரப்பட்டார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஆம்புலன்ஸில் இருந்த அந்த இளைஞரை ஆம்புலன்ஸில் ஏறி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- Vinoth V
- Updated on: Jul 5, 2026
- 6:58 pm IST
நடுரோட்டில் படுத்து அலப்பறை செய்த போதை ஆசாமி! போலீஸ் வாகனத்தை நிறுத்தி அட்ராசிட்டி!
திருப்பத்தூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும் முக்கிய பிரதான சாலையில் மாலை நேரத்தில் மது போதை ஆசாமி ஒருவர் மது குடித்து விடு குப்புற படுத்து உறங்கினார். இதனால் போக்குவரத்து சிறிது பாதிக்கப்பட்டது இதனை அறிந்த போக்குவரத்து காவலர் நடுரோட்டில் படுத்து உறங்கிய போதை ஆசாமியை அப்புறப்படுத்தினர்
- Vinoth V
- Updated on: Jul 2, 2026
- 7:56 pm IST
மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிய பெண்…. ஆம்புலன்ஸாக மாறிய அரசு பேருந்து
தாம்பரம் அருகே பேருந்தின் உள்ளே மயக்கம் அடைந்த பெண்ணிற்காக பயணிகளுடன் ஓட்டுனர் பேருந்தையே தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது பாராட்டை பெற்றுள்ளது. உடனடியாக செயல்பட்டு பயணிகளுடன் பேருந்தை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஓட்டுனருக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
- Vinoth V
- Updated on: Jul 1, 2026
- 8:39 am IST
சர்க்கரை ஆலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 ஊழியர்கள் மயக்கம் – பரபரப்பு தகவல்
நாட்றம்பள்ளி அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மூச்சுதிணறல் ஏற்பட்டு மூன்று ஊழியர்கள் மயக்கமடைந்தனர். தற்போது அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிமக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .
- Vinoth V
- Updated on: Jun 30, 2026
- 4:18 pm IST