சர்க்கரை ஆலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 ஊழியர்கள் மயக்கம் – பரபரப்பு தகவல்
நாட்றம்பள்ளி அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மூச்சுதிணறல் ஏற்பட்டு மூன்று ஊழியர்கள் மயக்கமடைந்தனர். தற்போது அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிமக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது .
நாட்றம்பள்ளி அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மூச்சுதிணறல் ஏற்பட்டு மூன்று ஊழியர்கள் மயக்கமடைந்தனர். தற்போது அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிமக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டியில் அரசு திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல் பட்டு வருகிறது. அங்கு 425க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து சர்க்கரை ஆலையில் உள்ள கொதிகலனுக்கு வண்ணம் பூசும் பணியில் மூன்று ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது ராமூ(48),சரவணன்(39), ஆறுமுகம்(39), உள்ளிட்ட மூன்று நிரந்தர ஊழியர்கள் ராட்சத டேங்கிற்கு வண்ணம் பூசும்போது எதிர்பாராத விதமாக மூச்சு திணறல் ஏற்பட்டு மூவரும் மயக்கம் அடைந்தனர். இதனைக் கண்ட சக ஊழியர்கள் மூவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாட்றம்பள்ளிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பணியின் போது மூச்சு திணறல் ஏற்பட்டு ஊழியர்கள் மயக்கம் அடைந்த சம்பவம் கூட்டுறவு சர்க்கரை அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது…