செங்கம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்; 4 பேர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சுண்டக்காபாளையத்தில் வாகனச் சோதனையில், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான 500 கிலோ ஹான்ஸ், விமல்பாக், கூல்லிப் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட குஜராத், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், பயன்படுத்தப்பட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டு செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
Follow Us
