கோவையில் பரபரப்பான சாலையைக் கடந்து சென்ற பாகுபலி காட்டு யானை!!
கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்த போதும் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி காட்டு யானை சாலை கடந்து செல்லும் வழக்கமான இடத்தில் வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி யானைக்கு வழி ஏற்படுத்தி கொடுத்து போக்குவரத்தை கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்தனர். இதனை அடுத்து காட்டு யானை பாகுபலி கல்லார் பகுதியில் இருந்து நெல்லிமலை செல்வதற்காக சாலையை கடந்து சென்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த சில வருடங்களாக பாகுபலி என அழைக்கப்படும் காட்டு யானை ஒன்று உலாவி வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் உதகையில் இருந்து கீழ்நோக்கி வரும் வாகனங்களின் எண்ணிக்கை கடுமையாக இருந்தது குறிப்பாக இன்று மாலை மேட்டுப்பாளையத்தில் இருந்து கல்லாறு வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்ற நிலையில், திடீரென காட்டு யானை பாகுபலி சாலையைக் கடப்பதற்காக வந்தது.
சாலை ஓரத்தில் யானை நிற்பதை பார்த்து பொதுமக்கள் மேட்டுப்பாளையம் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் காட்டு யானை சாலையை கடந்து செல்ல வழிவகை ஏற்படுத்த முயற்சித்தனர்.
