AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Aishwarya Lekshmi: அப்படி ஒருவருடன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை.. திருமணம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி!

Aishwarya Lekshmis Candid Views On Marriage: மலையாளம் சினிமாவின் மூலம் நுழைந்து, தற்போது தென்னிந்திய மக்களிடையே பிரபலமான நாயகியாக இருப்பவர் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இவர் கட்டா குஸ்தி 2 படத்தில் நாயகியாக நடித்துள்ள நிலையில், விரைவில் வெளியாகிறது. அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனது திருமணம் மற்றும் திருமணத்தின் பிந்தைய வாழ்க்கை குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

Aishwarya Lekshmi: அப்படி ஒருவருடன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை.. திருமணம் குறித்து வெளிப்படையாக பகிர்ந்த ஐஸ்வர்யா லெக்ஷ்மி!
ஐஸ்வர்யா லெக்ஷ்மிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Jun 2026 16:40 PM IST

ஆரம்பகாலத்தில் மருத்துவராக இருந்து, தற்போது சினிமாவில் லீட் நடிகையாக நடித்துவருபவர் ஐஸ்வர்யா லெக்ஷ்மி (Aishwarya Lekshmi). இவர் மலையாளம் சினிமாவின் மூலம் கதாநாயகியாக நுழைந்தார். கடந்த 2017ம் ஆண்டில் வெளியான “நெஜடுகளு நாட்டில் ஓரிடவேலா” என்ற படத்தில் நிவின் பாலிக்கு (Nivin Pauly) ஜோடியாக நடித்து சினிமாவில் நுழைந்தார். மேலும் தனது 2-வது படத்தில் டோவினோ தாமஸுக்கு (Tovino Thamos) ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம்தான் மாயநதி. இப்படத்தில் டோவினோ தாமஸுடன் நெருக்கமான காட்சிகளில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தமிழில் விஷாலின் (Vishal) ஆக்ஷன் படத்தில் நடித்து அறிமுகமானார். இவ்வாறு தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் தற்போது இவரின் நடிப்பில் வெளியாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2).

இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், நேர்காணல் ஒன்றில் அவர் கலந்துகொண்டார். அதில் பேசிய ஐஸ்வர்யா லெக்ஷ்மி தனது திருமணம் மற்றும் வருங்காலம் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஸ்கூல் படிக்கும் போது நடந்த ஈவ்-டீஸிங்… மனம் திறந்த நடிகை கயாடு லோஹர்

தனது திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி:

அந்த நேர்காணலில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி பேசுகையில், “திருமணம் என்னும் அமைப்பில் நுழைய எனக்கு பல சிக்கல்கள் உள்ளது. மேலும் கட்டா குஸ்தி 2 படத்தின்போது, ஒரு குழந்தையுடன் நெருக்கமாக, என் தாய்மை உணர்வுகள் விழித்துக்கொண்டன. எனக்காக வருபவன் ஒரு நல்ல தந்தையாக இருப்பார் என்றும், என்னை விட்டு ஓடிப்போக மாட்டார் என்றும் குறைந்தபட்சம் என்னால் கணிக்கக்கூடிய ஒருவருடன் நான் ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். இது குறித்து நான் முன்பே ஒரு வலுவான கருத்தைத் தெரிவித்திருக்கிறேன், ஆனால் தற்போது என் வாழ்க்கை முறையையும் நான் மாற்றிக்கொண்டுள்ளேன்” என அவர் அதில் வெளிப்படையாகபேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஜிவி பிரகாஷ் – கயாடு லோஹரின் இம்மார்டல் படத்தின் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

திருமணம் குறித்து நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:

கட்டா குஸ்தி 2 படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி நாயகியாக, ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார். இதில் குஸ்தி போட்டியிடும் பெண்ணாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்க, வீட்டுவேலை பார்க்கும் கணவனாக விஷ்ணு விஷால் நடித்திருக்கிறார். வரும் 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் இப்படமானது வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us