விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? படக்குழு வெளியிட்ட சென்சார் அப்டேட் இதோ!
Gatta Kusthi 2 Censor Update: தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்துவருபவர் விஷ்ணு விஷால். இவரின் நடிப்பில் பார்ட் 2 படமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2. இந்த படமானது யாவரும் 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் வெளியாகும் நிலையில், தற்போது இப்பட சென்சார் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷ்ணு விஷாலின் (Vishnu Vishal) நடிப்பில் முதல் முதலில் உருவாக்கப்பட்டுள்ள பாகம் 2 படம்தான் கட்டா குஸ்தி ரவுண்ட் 2 (Gatta Kusthi 2). இதில் இவர் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி (Aishwarya Lekshmi) நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. இதன் வெற்றிக்கு பின் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியிருக்கும் படம் கட்டா குஸ்தி 2. இதை இயக்குநர் செல்லா அய்யாவு (Chella Ayyavu) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த படமானது நகைச்சுவை மற்றும் சிறப்பாக பேமிலி பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் சென்சார் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தை யாரெல்லாம் பார்க்கலாம் என்பது குறித்து விவரமாக தெரிந்துகொள்ளலாம்.




இதையும் படிங்க: பயத்தின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது… பீட்சா 4 படத்தின் அறிவிப்பை வெளியிட்ட படக்குழு
கட்டா குஸ்தி 2 படத்தின் சென்சார் அப்டேட்:
குஸ்தி மற்றும் பேமிலி போன்ற கதைக்களத்தை மையமாக கொண்டு கட்டா குஸ்தி 2 படத்தை படக்குழு உருவாக்கியுள்ளது. மேலும் இப்படத்தில் அப்பா மற்றும் மகளின் பாசப்போராட்டம் குறித்தும் கூறப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இதற்கு சென்சார் குழு “யு” தர சான்றிதழை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: இயக்குநர் சுதா கொங்கராவால் அதர்வாவின் இதயம் முரளி படத்திற்கு வந்த சிக்கல் – என்ன நடந்தது தெரியுமா?
அதன்படி இப்படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் திரையரங்குகள் சென்று பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கட்டா குஸ்தி 2 படத்தின் சென்சார் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
‘U’ for Unlimited Family Fun! 💥#GattaKusthi2 censored U. 3 days to go, bring everyone along to theatres on July 3rd!
Produced by @VelsFilmIntl & @VVStudioz.
A film by @ChellaAyyavu.
A @RSeanRoldan musical.@IshariKGanesh @TheVishnuVishal #AishwaryaLekshmi @kushmithaganesh… pic.twitter.com/b3z7tVQmJh— Vels Film International (@VelsFilmIntl) June 30, 2026
கட்டா குஸ்தி 1ன் படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில், இந்த கட்டா குஸ்தி 2 படமானது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி குடும்பத்தையும், குஸ்தியையும் இரு கண்ணாக பார்த்துவருபவராக இருக்கிறார். மேலும் மனைவிக்காக வீட்டுவேலை செய்யும் கணவனாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். மேலும் இதில் பேமிலி, அப்பா மகள் பாசம் மற்றும் பல்வேறு சீரான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.