AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gatta Kusthi 2: களத்துல இறங்குவோமா..! அதிரடியாக வெளியானது விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி ரவுண்ட் 2 பட ட்ரெய்லர்!

Gatta Kusthi 2 Trailer: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்துவருபவர் ஐஸ்வர்யா லெக்ஷ்மி. இவர் மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2. இப்படமானது வரும் 2026, ஜூலை 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. அந்த வகையில் இன்று இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Gatta Kusthi 2: களத்துல இறங்குவோமா..! அதிரடியாக வெளியானது விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி ரவுண்ட் 2 பட ட்ரெய்லர்!
கட்டா குஸ்தி ரவுண்ட் 2 பட ட்ரெய்லர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Jun 2026 19:08 PM IST

நடிகர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal) மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி (Aishwarya Lekshmi) கூட்டணியில் 2வது முறை இணைந்திருக்கும் திரைப்படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2). கடந்த 2023ம் ஆண்டில் வெளியான கட்டா குஸ்தி 1 திரைப்படத்தை இயக்கியிருந்த இயக்குநர் செல்ல அய்யாவு (Chella Ayyavu) இப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர். இப்படம் கட்டா குஸ்தி 1 படத்தின் தொடர்ச்சியாக, கட்டா குஸ்தி 2 படமும் உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஷான் ரோல்டன்ட் இசையமைத்துள்ளார்.

இப்படமானது பேமிலி பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் தயாராகியுள்ளது. வரும் 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் இன்று 2026ம் ஆண்டு ஜூன் 28ம் தேதியில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு பகிர்ந்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: சாய் பல்லவி நடித்த அந்த படத்தை நான் ரிஜெக்ட் பண்ணேன் – ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஓபன் டாக்!

விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி கட்டா குஸ்தி 2 படத்தின் ட்ரெய்லர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

கட்டா குஸ்தி 2 படத்தின் டிரெய்லர் எப்படி இருக்கு:

இந்த கட்டா குஸ்தி 2 படமானது பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படமானது கட்டா குஸ்தி 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் அதிகம் வீட்டுவேலை செய்யும் நபவராக நடித்துள்ளார். மேலும் பார்ட் 1 படத்தை போலவே இதிலும் நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி குஸ்தி போட்டியாளராகவும் நடித்துள்ளார். மேலும் இவர்கள் இருவரின் மகளாக பேபி ஜான் படத்தில் நடித்த சாரா ஸ்ய்ன்னா நடித்துள்ளார். அப்பா மகள் மற்றும் மொத்தத்தில் பேமிலி படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் லுக் வெளியாகல.. டைட்டில் ரிலீஸ் பண்ணல.. ஆனால் – சூர்யா47 குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் ஓபன் டாக்!

கட்டா குஸ்தி 2 படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்:

இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லெக்ஷ்மியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, கருணாஸ், கருணாகரன், முனீஷ்காந்த் மற்றும் ஸ்ரீஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சென்சார் குழு யு சென்சார் சான்றிதழை கொடுத்துள்ளாராம். அதன்படி இப்படத்தை பெற்றோர்களின் அனுமதியுடன் அனைவரும் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us