தலைவரே மைக்-ஆ பிடிச்சி உண்மைய சொல்லவேண்டிய நிலை.. சர்ச்சையை கிளப்பிய விஷ்ணு விஷால்!
Vishnu Vishal Clarifies controversy Comment: நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் பிரதபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் அண்மையில், கட்ட குஸ்தி 2 பட ப்ரோமோஷன் நேர்காணல் ஒன்றில், ரஜினியின் பேச்சு குறித்து பேசியிருந்தார். அதில் அவர் கூறிய விஷயம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. மேலும் அந்த சர்ச்சைக்கு அவர் விளக்கமும் கொடுத்துள்ளார்.
தமிழில் வெண்ணிலா கபடிக்குழு என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஷ்ணு விஷால் (Vishnu Vishal). இப்படத்தில் இவரின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்றே கூறலாம். அந்த வகையில் இவரின் நடிப்பில் உருவாகிவந்த புது படம்தான் கட்டா குஸ்தி 2 (Gatta Kusthi 2). இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க, ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடித்துள்ளார். இப்படமானது சிறப்பாக தயாராகியிருக்கும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் லால் சலாம் (Lal Salaam) படம் மற்றும் ரஜினிகாந்த் (Rajinikanth) குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார்.
மேலும் அதில் அவர் சோஷியல் மீடியாவின் மற்றும் ரஜினிகாந்த் உண்மையை நிரூபிக்க மைக் பிடித்து பேசவேண்டியிருக்கிறது என அதில் கொஞ்சம் சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார். இது தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டுவரும் நிலையில், தான் பேசிய காரணம் குறித்து விளக்கமாக பதிலளித்திருக்கிறார்.
இதையும் படிங்க: திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இறுதி சடங்கு எப்போது? – குடும்பத்தினர் தெரிவித்த விஷயம்!
ரஜினிகாந்தை எடுத்துக்காட்டாக கூறிய சர்ச்சை குறித்து விளக்கமளித்த விஷ்ணு விஷால்:
சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருந்த விஷ்ணு விஷால், “நான் அந்த நேர்காணலில் தொகுப்பாளர் என்னிடம், சோஷியல் மீடியா கமெடு பற்றி கேட்டிருந்தார். அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் நான் ரஜினிகாந்த் சாறை ஏகூறியிருந்தேன். யாரையும் குறிப்பிட்டு நான் பேசவில்லை. அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாருக்கே விளக்கம் தரவேண்டிய நிலை இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று கூறினேன்.
இதையும் படிங்க: தனது 50-வது படத்திற்காக மீண்டும் அல்போன்ஸ் புத்திரனுடன் இணைந்த நிவின் பாலி
இதுபோன்ற சூழ்நிலையை சோஷியல் மீடியா யார் முதலில் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்களோ, அதுவே உண்மையாகிவிடுகிறது. அதற்கு நாம் பதிலளிக்காவிட்டால் அதுவும் உண்மையாகிவிடுகிறது. அனைவருக்கும் தங்களின் கருத்தை தெரிவிக்க சுதந்திரம் இருக்கிறது. அந்த சுதந்திரம் நடிகர்களுக்கும்தான் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது, நடிகர்கள் நாங்கள் பேசினால் மட்டும் ஏன் தவறாகிவிடுகிறது?” என அதில் அவர் கூறியுள்ளார்.
கட்டா குஸ்தி 2 படம் குறித்து விஷ்ணு விஷால் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
A song for every dad. A smile for every daughter ❤️ #Magaraasi – our second single from #GattaKusthi2 out now. A @RSeanRoldan musical.
https://t.co/gxA8ttkfb6See you all in theatres on July 3 🥊 pic.twitter.com/2cSxkii97o
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) June 19, 2026
இந்த படமானது கட்டா குஸ்தி 1 பட தொடச்சியில் தயாராகிவரும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜூலை 3ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



