ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் இணைந்த பிரபல நடிகை? வைரலாகும் தகவல்
Meenakshi Chaudhary is on board in Dharman Movie | தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தர்மன். இந்தப் படத்தில் பிரபல நடிகை நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக அதிகம் பேசப்பட்டது நடிகர் ரஜினிகாந்தின் 173-வது படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி தான். அதன்படி நடிகர் ரஜினிகாந்தி 173-வது படத்தை தயாரிப்பதாக நடிகர் கமல் ஹாசன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில் அந்த அறிவிப்பின் போது சுந்தர் சி இயக்குநராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இந்தப் படத்தை தான் இயக்கவில்லை என்று சுந்தர் சி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குநராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவரும் இந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அதனைத்ட் தொடர்ந்து ரஜினிகாந்தின் 173-வது படத்தை இயக்குநர்கள் தேசிங் பெரியசாமி அல்லது அஸ்வத் மாரிமுத்து இயக்க வாய்ப்பு உள்ளதாக தொடர்ந்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலானது.
அதனைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து தான் அந்தப் படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படி இருக்கும் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் தொடக்க விழா நடைப்பெற்றது. அதில் தலைவர் 173 படத்திற்கு தர்மன் என்று பெயர் வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
ரஜினிகாந்தின் தர்மன் படத்தில் இணைந்த பிரபல நடிகை?
அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி தர்மனில் மீனாட்சி சௌத்ரி இணைந்துள்ளார். இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஏற்கனவே சிலம்பரசன்படத்திற்காக மீனாட்சியை முடிவு செய்திருந்தார், எனவே இப்போது தர்மன் படத்திலும் அவரை நடிக்க வைத்துள்ளார். இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோரும் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் சிபியின் திட்டத்துடன் தொடர்புடைய சிம்ரன் இந்தப் படத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
As Per VP,
– #MeenakshiChaudhary OnBoard in Dharman, Dir #AshwathMarimuthu had already locked Meenakshi for his film with SilambarasanTR (STR51) and So now he has cast her in #Dharman as well.
– #Simran and #RaashiKhanna are also part of the film. Simran, who was initially… pic.twitter.com/bZPILYnAon
— Movie Tamil (@_MovieTamil) June 26, 2026
Also Read… Kavin: தண்டட்டி பட இயக்குநரின் இயக்கத்தில் கவினுடன் இணைத்த சஞ்சனா.. டைட்டில் இதுவா?



