AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நாள்தோறும் வலிமை பெற்று வருகிறேன் – வைரலாகும் ரவி மோகன் பதிவு

Actor Ravi Mohan X post | தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் ரவி மோகன் கடந்த இரண்டு ஆண்டுகளாக படம் தொடர்பாக செய்திகளில் இடம் பிடிப்பதை போல சொந்த வாழ்க்கை தொடர்பாக தொடர்ந்து செய்திகளில் இடம் பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாள்தோறும் வலிமை பெற்று வருகிறேன் – வைரலாகும் ரவி மோகன் பதிவு
ரவி மோகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Jun 2026 10:50 AM IST

தமிழ் சினிமாவில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு நாயகனாக அறிமுகம் ஆகி தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் ரவி மோகன். தொடர்ந்து படங்கள் தொடர்பான செய்திகளில் இடம் பிடித்து வந்த நடிகர் ரவி மோகன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்ததில் இருந்து தொடர்ந்து சொந்த வாழ்க்கை தொடர்பாக அதிக அளவில் செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். ஒரு பக்கம் ஆர்த்தி உடனான விவாகரத்து வழக்கு நடைப்பெற்று வந்த நிலையில் மற்றொரு பக்கம் தனது தோழி உடன் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மற்றும் சுற்றுழா செல்வதுமாக இருந்து வந்தார் ரவி மோகன். பிறகு தோழி குறித்து பல அவதூறுகள் எழுந்த நிலையில் அவர் ரவி மோகனைவிட்டு பிரிந்து சென்றார்.

இதனைத் தொடர்ந்து மனம் உடைந்த ரவி மோகன் ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்திய நடிகர் ரவி மோகன் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரால் தனக்கு ஏற்பட்ட மன உழைச்சல்களை வெளிப்படையாக பேசினார். பிறகு நீதிமன்ற உத்தரவை மீறியதாக அதற்கு மன்னிப்பும் கோரினார். அதனைத் தொடர்ந்து சபரிமலைக்கு மாலை அணிந்த ரவி மோகன் தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலகி வருகின்றது.

நாள்தோறும் வலிமை பெற்று வருகிறேன்:

நாள்தோறும் வலிமை பெற்று வருகிறேன்; என் மீது நிபந்தனையற்ற அன்பைப் பொழிந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுகிறேன். உங்கள் நம்பிக்கையே, பதிலுக்கு அன்பையும் மரியாதையையும் நேர்மறையான அனைத்தையும் உங்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு அளிக்கிறது. என் வளர்ச்சியை விரும்பும் அனைவருக்காகவும் திரைப்படத் துறையில் நான் அயராது உழைப்பேன். என் ரசிகர்கள், திரையுலக நண்பர்கள், ஊடகத்தினர் மற்றும் என்னை வழிநடத்தும் அந்தத் தெய்வீக ஒளி ஆகியோரிடமிருந்து இவையனைத்தையும் பெற்றதற்கு என் வாழ்நாளில் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். சுவாமியே சரணம் என்று ரவி மோகன் தெரிவித்து இருந்தார்.

Also Read… தலைவர் 173 படத்தின் டைட்டில் இதுதானா? சும்மா கெத்தா இருக்கே!

ரவி மோகன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கருப்பு படத்திலிருந்து வெளியானது கருப்பா கூட வா வீடியோ பாடல்

Follow Us