AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜிவி பிரகாஷின் இம்மார்டல் படத்திலிருந்து வெளியானது லவ்-யூ லவ்-யூ காட்டேரி பாடல்

Love U Love U Kaatteri Song | இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் தற்போது நடித்து வரும் படம் இம்மார்ட்டல். இந்தப் படத்தில் இருந்து லவ்-யூ லவ்-யூ காட்டேரி என்ற பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜிவி பிரகாஷின் இம்மார்டல் படத்திலிருந்து வெளியானது லவ்-யூ லவ்-யூ காட்டேரி பாடல்
இம்மார்ட்டல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jun 2026 18:39 PM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வந்த ஜிவி பிரகாஷ் குமார் தற்போது நாயகனாகவும் தொடர்ந்து கலக்கி வருகிறார். பொதுவாக மற்ற துறைகளில் அறிமுகம் ஆகி பிறகு நாயகனாக நடிக்கத் தொடங்கியவர்கள் தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடித்து வருகின்றனர். ஆனால் ஜிவி பிரகாஷ் குமார் படங்களில் நாயகனாக நடித்து வந்தாலும் தனது இசையை கைவிடாமல் தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்கும் பணிகளையும் விறுவிறுப்பாக செய்து வருகிறார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மொழிகளிலும் அடுத்தடுத்தப் படங்களில் தொடர்ந்து கமிட்டாகி இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து திரையுலகில் பிசியாக வலம் வரும் இவர் தற்போது தமிழ் சினிமாவில் இம்மார்ட்டல் என்ற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.

இறுதியாக நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான ஹேப்பி ராஜ் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் தற்போது அடுத்தடுத்து 9 படங்கள் வரிசையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படங்கள் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வெளியானது லவ்-யூ லவ்-யூ காட்டேரி பாடல்:

இந்த நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் தற்போது உருவாகி வரும் இம்மார்ட்டல் படத்தில் இருந்து பாடல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மாரியப்பன் சின்னையா எழுதி இயக்கி வருகிறார். மேலும் படத்தினை ஏகே ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரிப்பாளர் அருண் குமார் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துள்ள நிலையில் அவருடன் இணைந்து நடிகர்கள் டிஎம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்ய கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா த்சம்சோ, சுனிதா ஸ்ரேஸ்தா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் இருந்து லவ்-யூ லவ்-யூ காட்டேரி என்ற பாடலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… லவ், ட்ராமா, ஆக்‌ஷன், த்ரில்லர் – வெளியானது அர்ஜுன் தாஸின் கான் சிட்டி பட ட்ரெய்லர்

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… அம்மாவாக போகிறாரா நடிகை சமந்தா? வைரலாகும் போட்டோ

Follow Us